பிரிட்டனில் உள்ள சப்போல்க் பகுதியில் வசிக்கும் 29 வயதான லூசியா ரிச்சர்ட்சன் என்ற பெண்மணி, கடந்த சனிக்கிழமையன்று மார்ட்லேஷாமில் உள்ள கே.எப்.சி. உணவகத்தில் ஜிஞ்சர் பர்கரை வாங்கினார்.
இதை அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, 3 அடி நீளத்தில் ஒரு பொருள் இருப்பதை கண்டார்.
எலும்பு துண்டாக இருக்கும் என நினைத்த அவர், அதை கடித்த போது தான், அது எலும்பு துண்டல்ல, இரும்புத் துண்டு என்பதை கண்டுபிடித்தார்.
இதற்குள் ஐந்து முறை சிறு சிறு துண்டுகளாக அவர் பர்கரை உட் கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக கே.எப்.சி. நிர்வாகத்திடம் லூசியா முறையிட்டார்.
அவரிடம் மன்னிப்பு கேட்ட கே.எப்.சி. நிர்வாகத்தினர் புதிதாக வேறொரு பர்கரை வழங்கி சமாளித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த லூசியா, பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள இக்கம் பெனியில், இது போன்று நடந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்த லூசியா, பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள இக்கம் பெனியில், இது போன்று நடந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை.
நல்லவேளை அந்த இரும்பு துண்டை நான் விழுங்க வில்லை. ஒருவேளை நாள் அதை விழுங்கியிருந்தால் என்ன நடந்திருக்குமோ என்று தெரியவில்லை.
எனினும் தங்கள் தவறை அவர்கள் ஒப்புக் கொண்டனர். உரிய விசாரணைக்கும் உத்தர விட்டுள்ளனர் என்று லூசியா கூறினார்.
இதற்கிடையே தங்களது தவறை சரி செய்யும் நோக்கில், லூசியாவுக்கு சிறப்பு வவுச்சர்களை வழங்கி கே.எப்.சி. சமாளித்து வருகிறது.
ஆனால், லூசியாவோ, நான் எப்போதாவது தான் கே.எப்.சி.க்கு செல்வேன். ஆகையால் எனக்கு வழங்கப்பட்ட கூப்பன்களை வைத்து நான் எதுவும் செய்யப் போவதில்லை என்றார்.