சர்வதேச யோகா நிகழ்ச்சிக்கு ரூ.32 கோடி செலவு

0
முதலாவது சர்வதேச யோகா தினம் கடந்த மாதம் 21-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்காக 32 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இதுபற்றி மத்திய ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை, யுனானி, சித்தா, ஓமியோபதி துறை (ஆயுஷ்) மந்திரி ஸ்ரீபாத் நாயக் மக்களவையில் இன்று தெரிவித்ததாவது:-

ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை, யுனானி, சித்தா, ஓமியோபதி அமைச்சகம் (ஆயுஷ்) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சர்வதேச யோகா தினத்தை டிஏவிபி விளம்பரம்,

தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி மூலம் மக்களிடையே கொண்டு சென்று பிரபலப்படுத்துவதற்காக 8.28 கோடி ரூபாயும், ராஜபாதையில் செய்யப்பட்ட பிரமாண்ட ஏற்பாடுகளுக்கு 7.58 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.

 விஞ்ஞான் பவனில் நடந்த சர்வதேச மாநாட்டிற்காக 1.82 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர மத்திய வெளியுறவுத்துறை 8 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. மாவட்டந்தோறும் யோகா முகாம்கள் மற்றும் யோகா தின விழா நடத்துவதற்காக 6.7 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. யோகா நெறிமுறை படங்கள் மற்றும் சிறுகையேடுகள் தயாரிப்புக்கு ரூ.34.80 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.

ராஜபாதையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் 35985 பேர் பங்கேற்று சிறப்பித்தனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings