டிராக்டர் டிரைவருக்கு அரிவாள் வெட்டு ஊராட்சி துணை தலைவர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

வலங்கைமான் அருகே டிராக்டர் டிரைவர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக ஊராட்சி துணை தலைவர் உள்பட 3 பேரை போலீசார் வலை வீசி தேடிவருகி றார்கள்.

ஊராட்சி துணை தலைவர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த செம்மங்குடியை சேர்ந்தவர் மணிமேகலை. அதே பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிர மணி யன் மகன் ராஜா. அ.தி.மு.க. பிரமுகரான இவர், தொழுவூர் ஊராட்சி துணை தலைவராக பதவி வகித்து வருகிறார்.

உறவினர்களான இவர்கள் 2 பேரின் குடும்பங்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் மணிமேகலையின் வயலில் நேற்றுமுன்தினம் டிராக்டர் மூலம் உழவு பணி நடந்து கொண்டிருந்தது.

டிராக்டரை கடலூரை சேர்ந்த அஞ்சுபுலி மகன் ரமணி (24) என்பவர் ஓட்டி கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ராஜா உள்பட 3 பேர் டிராக்டர் டிரைவர் ரமணியின் கண் களில் மிளகாய் பொடியை தூவி, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்கள்.

மருத்துவமனையில் அனுமதி

இதில் படுகாயம் அடைந்த ரமணி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ரமணி அளித்த புகாரின்பேரில் வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா உள்பட 3 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Tags:
Privacy and cookie settings