3 வது நாளாக பார்லி.யில் அமளி.. இரு அவைகளும் ஒத்திவைப்பு !

லலித் மோடி விவகாரத்தால் 3 வது நாளாக பார்லி.,யில் இன்றும் அமளி ஏற்பட்டது. கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கி யுள்ளனர்.
இது குறித்து, தான் பரிசீலித்து வருகிறேன் என்றும், பின்னர் முடிவு செய்வேன் என்றும், தற்போது கேள்வி நேரம் தொடரும் என்றும் லோக்சபாவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

இருப்பினும் அமளி தொடர்ந்தது. இதனையடுத்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.ராஜ்யசபாவிலும் காங்கிரஸ் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இது குறித்து அவைத்தலைவர் குரியன் பேசி வருகிறார்.

நான் இந்த விவகாரத்தில் ஏதும் செய்ய முடியாது. என்னை பேச அனுமதியுங்கள், அமைதியாக உட்காருங்கள் என்றார். விவாதத்தை நான் அனுமதிக்கிறேன். என்று கூறினார். சுஷ்மா ராஜினாமா செய்த பின்னரே விவாதம் துவங்க வேண்டும் என இடதுசாரியை சேர்ந்த சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தினார்.

காங்கிரஸ் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள நோட்டீஸில் ராஜினாமாக குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை என மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். ஆனாலும் , எதிர்கட்சியினர் திருப்தி அடையவில்லை. தொடர்ந்து அமளி நிலவியது. இதனை தொடர்ந்து ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டது.

சோனியா கண்டனம்

பார்லி.,யில் நடக்கும் விவாதம் ஆளும் மத்திய அரசின் டி.வி.,யில் ஒளிரப்பு செய்யப்படுவதில்லை. இருட்டடிப்பு செய்ப்படுகிறது என காங்., தலைவர் சோனியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings