பணி நேரத்தில் சீருடையில் இளைஞர் காவல் படையினருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது போன்ற வீடியோ வாட்ஸ்அப்பில் வெளியானதால் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அமுதசெல்வி. இவர் போலீஸ் நிலைய வாசல் பகுதியில் இளைஞர் காவல் படையினருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது போன்ற வீடியோ காட்சி வாட்ஸ்அப்பில் வெளியானது.
போலீஸ் நிலைய வாசலில் இன்ஸ்பெக்டர் ஒருவர் சீருடையில் பணியின்போது இளைஞர் காவல்படையினருடன் நீண்ட நேரம் இவ்வாறு கிரிக்கெட் விளையாடுவது போன்ற வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த விசாரணையில் ராமேசுவரம் கோவில் போலீஸ் நிலைய டிரைவராக உள்ள இளைஞர் காவல் படையை சேர்ந்த முத்து ராமலிங்கம் புதிதாக தனது வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக கிரிக்கெட் மட்டை வாங்கியதும்.
இதனை பார்த்த இன்ஸ்பெக்டர் அமுத செல்வி இரவு ரோந்து பணிக்கு செல்லும்முன் புதிய கிரிக்கெட் மட்டையில் இளைஞர் காவல்படையை சேர்ந்த முத்துராமலிங்கம், ராஜிவ்காந்தி ஆகியோருடன் சேர்ந்து விளையாடி பார்த்துள்ளதும் தெரியவந்தது.
போலீஸ் நிலையம் முன்பு இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரும் பேட்டிங் செய்வதும், பவுலிங் செய்வதும் போன்ற இந்த வீடியோ காட்டுத்தீ போல வாட்ஸ்அப்பில் பரவியது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
ராமேசுவரம் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதசெல்வி மற்றும் 2 இளைஞர் காவல் படையினர் பணி நேரத்தில் கிரிக்கெட் விளையாடியது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்கட்டமாக அவர்கள் 3 பேரும் ராமநாதபுரம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.