ஆந்திராவில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு 10 ஆயிரம் பேருக்கு வேலை !

அமெரிக்காவை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆந்திர பிரதேசத்தில் முதலீடு செய்ய முன் வந்துள்ளன. குறிப்பாக, ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு அங்கு முதலீடு செய்யப்பட உள்ளது. 
ஆந்திராவில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு 10 ஆயிரம் பேருக்கு வேலை !
இதன் மூலம் ஆந்திராவில் 10 ஆயிரம் பேருக்கு உறுதியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஆந்திர மாநில ஐ.டி.துறை மந்திரி ரகுநாத ரெட்டி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ள அமெரிக்க நிறுவனங்களின் விபரம் வருமாறு:-

அமெரிக்கன் ஹில்லார்டு எனர்ஜி கம்பெனியின் தலைவர் சன் ஸ்டெர்லிங் ஹில்லார்டு ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்தில் சோலார் மற்றும் 

காற்றாலை மின் உற்பத்தியில் ரூ.3600 கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கியுள்ளார்.

அதே போல், கிளவுட் ராக் ஐ.டி. நிறுவனத்தின் துணை தலைவர் திருப்பதியில் 7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடு ஐ.டி. நிறுவனங்களை துவங்க உள்ளதற்கான ஒப்புதல் கடிதத்தை அளித்துள்ளார்.
திருப்பதியில் ஐ.டி. நிறுவனத்தை துவங்க 5 மில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்ய கிளமென்டெக் நிறுவனம் முன்வந்துள்ளது. கடிதத்தின் வாயிலாக இதை உறுதி செய்துள்ளது. 

அதேபோல், 5 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் ஐ.டி நிறுவனத்தை துவங்க மற்றொரு நிறுவனமான ஆர்கிடெக்ட் டொமைன்.காம் எனும் நிறுவனமும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதவிர, பார்மா நிறுவனங்களும் ஆனந்தபூர், விசாகபட்டினம், விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் முதலீடு செய்ய முன் வந்துள்ளன. 

வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர் ரவி சீரலாவும் ஆந்திராவில் ரூ.600 கோடி முதலீட்டில் ஸ்டீல் மற்றும் அலுமினிய தொழிற்சாலைகளை நிறுவ ஒப்புதல் வழங்கியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings