சவூதி இளவரசருக்காக உருவாக்கப்பட்ட பறக்கும் அரண்மனை !

சில ஆண்டுகளுக்கு முன் உலகின் மிகப்பெரிய தனிநபர் பயன்பாட்டு விமானம் உருவாக்கப்பட்டு வருவது குறித்த தகவல்கள் மீடியாக்களில் பரபரப்பாக எழுதப்பட்டன.


உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமைக்குரிய ஏர்பஸ் ஏ380 விமானத்தை பெரும் பணக்காரர் ஒருவருக்காக, ஆடம்பர வசதிகளுடன் மாற்றப்படுவதாக அந்த தகவல்கள் கூறின.

அந்த விமானத்தில் இருந்த வசதிகள், யாருக்காக கட்டப்பட்டது உள்ளிட்ட பல சுவையானத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சவூதி இளவர சருக்காக...

சவூதி அரேபிய நாட்டின் இளவரசரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான அல் வாலீத் பின் தலாலுக்கு அந்த விமானம் முன்பதிவு செய்யப்பட்டது.


மதிப்பு

ஏர்பஸ் ஏ380 விமானம் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது. அந்த விமானத்தில் ஆடம்பர வசதிகளுக்காக கூடுதலாக 200 மில்லியன் டாலர் செலவிட முடிவு செய்யப்பட்டது.

இடவசதி

இந்த விமானத்தில் வெறும் எக்கானமி கிளாஸ் இருக்கைகளுடன் அமைத்தால் 853 பேர் பயணிக்க முடியும். ஆனால், இந்த விமானத்தை சவூதி இளவரசர் தனது குடும்பத்தினர், சகாக்கள் மற்றும் வர்த்தக நண்பர்களுடன் பயணிக்கும் வகையில், சகல வசதிகளுடன் மாற்றப்பட்டது.

ரோல்ஸ் ராய்ஸ்க்கு இடம்

விமானத்தில் சவூதி இளவரசரின் ரோல்ஸ்ராய்ஸ் கார் நிறுத்துவதற்காக பிரத்யேக இட வசதியுடன் செய்யப்பட்டது. இதன்மூலம், காரில் நேரடியாக விமானத்திற்குள்ளேயே வந்து இறங்க முடியும்.
டிசைன் நிறுவனம்

ஏர்பஸ் ஏ380 விமானத்திற்குள் ஆடம்பர வசதிகளுடன் கட்டமைப்பதற்காக இங்கிலாந்தை சேர்ந்த டிசைன் க்யூ என்ற பிரபல நிறுவனத்தை சவூதி இளவரசர் அல் வாலீத் நியமித்தார். அந்த நிறுவனம்தான் இன்டிரியரை வடிவமைக்கும் பொறுப்புகளை ஏற்றது.


அறைகள்

உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்குவதற்கான 2 பிரம்மாண்ட படுக்கையறைகள், அதனுடன் இணைந்த குளியலறைகள், 20 விருந்தினர்கள் தங்குவதற்கான படுக்கை வசதிகள்,

கூட்ட அரங்கம், பொழுதுபோக்கு அரங்கம், சாப்பாட்டுக் கூடம் என்று ஆடம்பரத்தின் உச்சமாக ஒரு ஐந்த நட்சத்திர விடுதிக்கு இணையாக இதனை உருவாக்கினர்.

தொழுகை அறை

விமானத்தில் தொழுகைக்கான இடத்தில் இளவரசர் அமரும் தரைவிரிப்பு எந்தநேரமும் மெக்காவை நோக்கி இருக்கும் வகையில், கம்ப்யூட்டர் முறையில் கட்டுப்படுத்தும் வசதி கொண்டது.


மேஜிக் கார்பெட்

இந்த விமானத்தில் இருக்கும் மேஜிக் கார்பெட்டில் இருந்து விமானம் பறந்துகொண்டிருக்கும்போது வெளிப்புறத்தில் இருக்கும் சூழலை அப்படியே திரையில் பார்க்க முடியும்.

3 ஆண்டுகள்

இந்த விமானத்தில் ஆடம்பர வசதிகளுடன் கட்டமைப்பதற்கு 3 ஆண்டுகள் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், என்ன நடந்தது தெரியுமா...

உரிமையாளர் மாற்றம்

உலகின் மிகப்பெரிய தனிநபர் பயன்பாட்டு விமானமாக கூறப்பட்ட இந்த ஏர்பஸ் ஏ380 விமானத்தை சவூதி இளவரசர், டெலிவிரி எடுப்பதற்கு முன்பே வேறு ஒருவருக்கு கைமாற்றி விட்டார் .

சவூதி இளவரசர் அல் வாலீத் பின் தலால். காரணம் என்னவென்று தெரிவிக்கப்படவில்லை. மேலும், அந்த விமானத்தை யாருக்கு விற்றார் என்ற தகவலையும் வெளியிட அல் வாலீத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார்.


விமான கலெக்ஷன்

பணக்காரர்கள் கார் கலெக்,ன் செய்வதுபோல அல் வாலீத்திடம் பல விமானங்களை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகிறார். 

அவரிடம் போயிங் 747, ஹாக்கர் ஜெட், ஏர்பஸ் ஏ321 போன்ற தனிநபர் பயன்பாட்டு விமானங்கள் சொந்தமாக உள்ளன. உலகின் மிகவும் காஸ்ட்லியான ஆடம்பர படகும் உள்ளது.
Tags:
Privacy and cookie settings