சித்தார்த், பாபி சிம்ஹா நடித்த ஜிகர்தண்டா படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், அதன் தயாரி ப்பாளர் எஸ்.கதிரேசன் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில்,
படத்தின் இந்தி மொழி உரிமையை தனக்கு தெரியாமல் விற்க முயற்சி செய்வதாகவும், படத்தின் காப்பிரைட் தன்னிடம் இருப்பதாகவும்,
படம் இயக்கிய வகையில் தனக்கு சம்பள பாக்கி மற்றும் நஷ்டஈடாக ₹40 லட்சம் தர வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
காப்பிரைட் உரிமை மற்றும் இந்தி மொழி உட்பட வேறு மொழி மாற்று உரிமை யையும் தயாரி ப்பாளர் வேறு யாருக்கும் விற்கக் கூடாது என்று தடை உத்தரவு வாங்கியி ருந்தார்.
இதை எதிர்த்து தயாரி ப்பாளர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.முத்து ராமன் ஆஜராகி, தடை உத்தரவை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.
இதை யடுத்து தயாரிப் பாளரின் பைவ் ஸ்டார் பிலிம்ஸ் நிறுவ னத்தின் மற்றொரு இயக்கு னரான கலைச் செல்வி, நேற்று நிருபர் களிடம் கூறிய தாவது:‘ ஜிகர்தண்டா’ படத்துக்கு கோடிக்கண க்கில் செலவானது.
ஷூட்டிங்கை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தாமதப் படுத்திய வகையில், ஒரு கோடியே 36 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
மேலும், எங்கள் நிறுவனத்தின் மீது அவதூறாக செய்திகள் பரப்பி யதால், இன்றுவரை தெலுங்கு டப்பிங் உரிமையை எங்க ளால் விற்க முடிய வில்லை. இதனால், ₹4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட் டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் எங்கள் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இப்படத்தின் கதை மற்றும் அனைத்து உரிமை களையும் ஏற்கனவே எங்களுக்கு கொடுத்தாகி விட்டது.
இப்போது வேண்டு மென்றே தவறான தகவல் களைப் பரப்பி வருகிறார்.
நீதி மன்ற த்தில் எங்கள் மீது வழக்கு தொடுத்து, தடை உத்தரவு வாங்கி யிருந்தார். இப்போது அந்த உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் நீக்கியி ருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் எங்களைப் பற்றி தவறான குற்றச் சாட்டுகள் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லை என்றால், அவர் மீது ₹5 கோடியே 36 லட்சம் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர திட்ட மிட்டுள் ளோம். இவ்வாறு அவர் கூறினார்.