உலகளாவிய அளவில் வறுமை மற்றும் பசியால் மூன்று வினாடி களுக்கு ஒருவர் உயிரிழந்து வரும் நிலையில் பஹ்ரைன் நாட்டில் மட்டும்
ரம்ஜானை யொட்டி தினந்தோறும் 600 டன் உணவு வீணாக்கப் படுவதாக அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித் துள்ளனர்.
ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் வீடுகளில் சமைக்கப் படும் உணவு வகைகள் மற்றும் உணவகங்களில் இருந்து வாங்கும் பொருட்களில்
சுமார் 30 சதவீதம் சாப்பிடாமல் அப்படியே குப்பைத் தொட்டி மற்றும் கால்வாய் களை சென்று சேருவதாகவும்,
இதன் காரணமாக வீணாக்கப் பட்ட சுமார் 600 டன் உணவால் சுற்றுச்சூழல் மாசு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவ தாகவும் இங்குள்ள சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித் துள்ளனர்.
இந்த கழிவுகளை அகற்றுவதில் சுகாதாரத் துறை பணியாளர் களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு,
வீடுகளில் தேங்கும் வீணாக்கப் பட்ட உணவு வகைகளை குப்பைத் தொட்டி மற்றும் கால்வாய் களில் கொட்டி பாழ்படுத் தாமல்,
ஒதுக்குப் புறமான பகுதிகளில் பள்ளம் தோண்டி அவற்றை புதைப்பதன் மூலம் துர்நாற் றத்தையும், சுகாதார சீர்கேட்டை யும் தடுக்க முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டி யுள்ளனர்.
குர்ஆனில் குறிப்பிட்டுள்ள படி, இதர பாவங்களைப் போல் உணவு வகைகளை வீணடிப்பதும் பெரும் பாவம் ஆக உள்ளது. ’அருந்துங்கள், பருகுங்கள்,
ஆனால், ஒருபோதும் வீணடிக் காதீர்கள்’ என முஹம்மது நபி (ஸல்) அவர்களும் வலியுறுத்தி வந்துள்ளார். நம்மால் இவ்வளவு சாப்பிட முடியாது என்று தெரிந்தி ருந்தும்,
பிறருக்கு கிடைக்காத வகையில் நாமே நிறைய உணவுப் பொருட்களை வாங்கி, சேமித்து வைத்துக் கொள்வதையும், அவற்றை சமைத்து,
குறிப்பாக ரம்ஜான் மாதத்தில் உண்ணாமல் பாழடிப்பதை யும் ஒரு வகையில் குற்றமாகவும், பாவமாகவும் கருத வேண்டும்.
இப்படி, உணவுகள் பாழடிக்கப் படுவதை தவிர்ப்பதம் மூலம், நமது எதிர்கால சந்ததியரை உணவுப் பற்றாக் குறையில் இருந்தும்,
பஞ்சம், பசி, பட்டினி மரணத்தில் இருந்தும் நம்மால் பாதுகாக்க முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக் கின்றனர்.