54 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் கியூபா தூதரகம் திறப்பு !

அமெரிக்கா - கியூபா இடையே, 54 ஆண்டுகளாக நீடித்து வந்த பனிப்போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, இரண்டு நாடுகளும், பரஸ்பரம் துாதரகங்களை திறந்துள்ளன. 
54 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் கியூபா தூதரகம் திறப்பு !
இதற்கான விழா, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது. வெள்ளை மாளிகை அருகே, புதுப்பிக்கப்பட்ட கியூபா துாதரகத்தை, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்,

புருனோ ரோட்ரிகஸ், திறந்து வைத்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கடந்த, 1961ம் ஆண்டுக்குப் பிறகு, முதன் முறையாக, கியூபா துாதரகத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டது.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, புருனோ ரோட்ரிக்ஸ், வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியை சந்தித்து பேசினார்.

அப்போது, இரண்டு நாடுகளிடையே பூத்துள்ள நல்லுறவை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.
கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள அமெரிக்க துாதரகம் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், அதிகாரப் பூர்வமாக, வரும் ஆகஸ்ட் மாதம், அதை, ஜான் கெர்ரி திறந்து வைக்க உள்ளார்.

கம்யூனிச நாடான கியூபாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே மீண்டும் மலர்ந்துள்ள உறவு, இரண்டு நாடுகளுக்கும், குறிப்பாக, கியூபாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings