குஜராத் மழை வெள்ளத்தில் 10 சிங்கங்கள், 90 மான்கள் இறந்தன !

குஜராத் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26&ந்தேதி கனமழை பெய்தது. இதனால் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சிட்ருன்ஜி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்த கனமழைக்கு 40&க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.
இந்த நிலையில் கனமழை வெள்ளத்துக்கு குஜராத் மாநிலத்தில் 10 சிங்கங்கள் மற்றும் 90 புள்ளிமான்கள் இறந்ததாக அம்மாநில வனத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மாநில வனத்துறை சார்பில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

அதில், குஜராத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அம்ரேலி மற்றும் பாவ்நகர் மாவட்டங்களில் 10 சிங்கங்கள் இறந்து உள்ளன. 1,670 நீலஎருதுகள், 87 புள்ளிமான்கள், 9 கலைமான்கள், 6 காட்டு பன்றிகள் இறந்து உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மூலமாக வெள்ளத்தில் சிக்கிய 84 சிங்கங்கள் உயிருடன் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு பத்திரமாக கொண்டு செல்லப்பட்டு உள்ளனஎன்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:
Privacy and cookie settings