பர்மாவின் இனக்கலவரம் எப்போது? யாரால்? எங்கே?

மூன்று முஸ்லிம் களால் கற்பழித்து கொலை செய்ய்யப் பட்டதாக கூறி, மூன்று பேரை போலிஸ் கைது செய்கிறது. ஒருவர் போலிஸ் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டதாக போலிஸ் சொல்கிறது. மற்றைய இரண்டு பேருக்கும் மரண தண்டனை நிறை வேற்றப் படுகிறது.


June 3 :

முஸ்லிம்கள் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பஸ் வண்டியொன்றை நூற்றுக்கணக்கான பர்மிய பெருன்மான்மை பௌத்தர்கள் தொங்கோப் என்ற இடத்தில் இருக்கும் போலிஸ் சோதனை சாவடியில் வைத்து தடுத்து நிறுத்தி பயணிகளை தாக்க ஆரம்பிக்கிறார்கள்.

இதில் பத்து முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். பக்கத்தில் நின்ற போலீசாரோ அல்லது இராணுவமோ இந்த கலவரத்தை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்

June 7

ஜூன் 3ஆம் திகதி 10முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை விசாரிப்பதற்காக 16பேர் கொண்ட விசாரணை குழு ஒன்றை பிரதி உள்விவகார அமைச்சர் தலைமையில் பர்மிய அரசு அமைக்கின்றது.

ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்பாக விசாரணை அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்று கட்டளை இடப்படுகிறது. எனினும் இந்த விசாரணை அறிக்கை மூன்று வருடம் கழித்தும் இன்னும் வெளியாகவில்லை.

June 8 :

ரோஹிங்கியா முஸ்லிம்கள் செறிந்து வாழும் மங்டொவ் நகரத்தில் இருக்கும் பௌத்தர்களின் சில வீடுகள் தீக்கிரையாக்கப்படுகிறது. பழியை ரோஹிங்கியாக்கள் மீது போடுகிறது அரசும் பத்திரிகைகளும்.

June 8-12 :

சித்வே என்ற நகரத்தில் பௌத்தர்களுக்கும் ரோஹிங்கியக்களுக்கும் இடையில் பெரும் கலவரம் மூளுகின்றது. பாதுகாப்பு பிரிவினர் இந்த கலவரத்தை தடுத்து நிறுத்தாமல் முஸ்லிம்களுக்கு எதிரான கலகக்காரர்களின் பக்கம் நிற்கின்றனர்.

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள் சித்வே நகரத்தில் இருந்து இடம்பெயர்கின்றனர்.பல நூற்றுக்கானவர்கள் கொல்லப்படுகின்றனர்.

முஸ்லிம்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்படுகின்றது. போலீசார் பல நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்களை வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று கைது செய்கின்றனர்.

June 10 :

பர்மிய ஜனாதிபதி தியான் சயான் அரக்கேன் மாநிலத்தில் அவசரகால சட்டத்தை பிரகடனபடுத்துகிறார். பொலிசாருக்கு மேலதிகமாக இராணுவம் வரவழைக்கப்பட்டு பல நகரங்களில் காலவரையற்ற ஊரடனங்கு சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.

June-October :

இந்த இடைப்பட்ட காலங்களில் பெரும்பான்மை பௌத்த அரசியல் தலைவர்களும் பிக்குகளும் முஸ்லிம்களுடன் எந்த ஒரு வர்த்தக தொடர்பும் வைத்துக்கொள்ளவேண்டாம்,

முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை புறக்கணியுங்கள் என்று என்று தமது மக்கள் மத்தியில் பகிரங்கமாகவே பிரச்சாரப்படுத்துகின்றனர். சிலர் சில இடங்களில் இருந்து முஸ்லிம்களை இனவழிப்பு செய்யவேண்டும் என்றும் கூக்குரல் இடுகின்றனர்.

July 6 :

பர்மிய அரஸு கைது செய்திருக்கும் 10 ரோஹிங்கியாக்களை சார்ந்த ஐநா மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்களை விடுவிக்கும் படி பர்மிய அசாங்கத்தை ஐநா கேட்டுக்கொள்கிறது.

இதில் ஐந்து பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். இன்னும் ஐந்துதொடர்ந்தும் தடுப்பு காவலில் இருக்கின்றனர்.

July 12 :

அரக்கேன் மாநிலத்தில் தொடரும் பிரச்சினைகளுக்கு “ஒரேயொரு தீர்வாக” அங்கு இருக்கும் “சட்டவிரோதமான” ரோஹிங்கியாக்களை ஒன்றில் நாடு கடத்தவேண்டும்

அல்லது ஐநா அகதிகள் நிறுவமான UNHCR இன் மேற்பார்வையில் பங்களாதேஷில் அகதி முகாம்கள் அமைத்து அங்கு குடியேற்ற வேண்டும் என்று பர்மிய ஜனாதிபதி அதிரடியாக அறிவிக்கிறார். இந்த முன்மொழிவை UNHCR மறுக்கிறது.

August 2 :

பர்மிய வெளிவிவகார அமைச்சர் வுன்னா எல்வின் இந்த கலவரங்களின் பின்னணியில் “சர்வதேச சதி” இருப்பதாக குற்றம்சாட்டுகிறார். மேலும் இந்த கலவரங்களின் போது

தேவைக்கதிகமாக ஒருபக்கத்தின் மீதி மாத்திரம் (ரோஹிங்கியாக்கள் மீது) பலப்பிரயோகம் செய்யப்பட்டுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

August 10 :

அன்றைய துருக்கிய வெளிவிவகார அமைச்சர் அஹ்மத் தாவுதொக்லு அவர்களும் அன்றைய பிரதமரான எர்டோகானின் மனைவியும் பர்மாவுக்கு விஜயம் செய்து ரோஹின்கியா மக்களை நேரில் சந்தித்து தமது உதவிகளை கையளிக்கின்றனர்.

Aug 12 :

சவூதி அரசு 50 மில்லியன் டொலர் உதவிகளைபாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக கொடுக்கின்றது.

Aug 15 : 

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கான உதவிகளை எப்படி மேற்கொள்வது என்பது தொடர்பாக முஸ்லிம் ஒத்துழைப்பு நாடுகளின்(OIC) மக்காவில் ஒன்று கூடி தீர்மானம் மேற்கொள்கின்றனர்.

இதில் தமது பிரத்நிதிகளை உடனடியாக பர்மாவுக்கு அனுப்புவது, ரோஹிஞ்சியாக்களுக்கு முழு பிரஜா உரிமை வழங்குவதற்கு ஐநாவின் உதவியை நாடுவது என்பதுடன் பர்மாவில் தமது அமைப்பின் கிளை ஒன்றை அமைக்கவேண்டும் என்று தீர்மானம் மேற்கொள்ளப்படுகிறது.

துருக்கியர்களின் விஜயம், சவூதியின் நன்கொடை, OIC இன் தீர்மானத்தால் ஆத்திரம் அடைந்த பௌத்தர்கள் ,இதற்கு பழிவாங்கும் நோக்கில் மேலும் பல ரோஹிங்கியா கிராமங்களை தீ வைத்து அழிக்கின்றனர்.

August 17 : 

சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்ததும் அரக்கேன் மாநிலத்தில் இடம்பெற்ற கலவரத்தை கண்டறிவதற்காக 27பேர் கொண்ட விசாரணை ஆணைக்குழுவை பர்மிய ஜனாதிபதி நியமிக்கிறார்.

October 21-24 : 

ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் ஒன்பது நகரங்களில் ஒரே நேரத்தில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெடிக்கிறது. தற்போது ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மேலதிகமாக கமன் இனத்தை சார்ந்த முஸ்லிம்களுக்கும் எதிராகவும் வன்முறை நிகழுகிறது.

கிட்டத்தட்ட 40,000 முஸ்லிம்கள் இடம்பெயருகிறார்கள். இந்த முறையும் பொலிசாரும் பாதுகாப்பு படையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றதற்கு மேலதிகமாக அவர்களும் வன்முறையில் பங்குபற்று கிறார்கள்.

ஆகக்குறைந்தது 28 குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

October 25 : 

“எதிர்பாராத வகையில் வன்முறை நிகழ்ந்தது” என்று அரசு கதைவிடுகிராது. மொத்தம் 12பேர் மாத்திரம் கொல்லப்பட்டதாக அரசு அறிவிக்கிறது.

சில தனியார்களும் நிறுவனங்களும் வன்முறையின் பின்னால் இருப்பதாகவும் நடக்கும் சிறு சம்பவங்களையும் ஊதிப்பெருப்பிதாகவும் அரசு அவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றது.

November 15 : 

முஸ்லிம் ஒத்துழைப்பு நாடுகளின் (OIC) பிரதிநிதிகள் பர்மாவை வந்தடைகின்றார்கள். இவர்களை அங்குள்ள பௌத்த பிக்குகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ரோஹிங்கியா மக்களை சந்திகின்றார்கள்.

பர்மிய அரசிடம் தமது அலுவலகம் ஒன்றை திறப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு தற்காலிக அனுமதியை பெறுகின்றார்கள். மேலும் ரோஹிங்கியாக்களுக்கு பிரஜா உரிமை வழங்கி அவர்களை உரிய முறையில் மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என்று வலியுறுத்திறார்கள்.

November 16 : 

பர்மிய ஜனாதிபதிபாராளுமன்றத்தில் உரையாற்றும் போது “உணர்ச்சி வசப்படுவதே எல்லாத்திற்கும் காரணம் “என்றும் “ தனது அரசு ரோஹிங்கியாக்களை உரிய முறையில் மீள் குடியேற்றம் செய்வதற்கும்,

அவர்களுக்கு பிரஜா உரிமை வழங்குவதற்கும், வேலை பத்திரம், பிறப்பு சான்றிதழ், நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் செல்வதற்கான அனுமதி போன்றவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு தயாராகி வருவதாக” அறிவிக்கிறார்.

November 19 : 

பராக் ஒபாமா பர்மா வந்தடைகிறார். ரங்கூன் பல்கலைகழத்தில் இடம்பெற்ற சொற்பொழிவில் பர்மாவில் இடம்பெறும் வன்முறைகள் ‘அபாயகர கட்டத்தை அடைந்து இருப்பதாக” குறிப்பிடுகிறார்.

November 2012-April 2013 : 

அங்காங்கு தொடர்ந்தும் ரோஹிங்கியாக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடருகின்றது. இதில் பெரும்பாலும் பாதுகாப்பு பிரிவினரே சம்பந்தப்படுகின்றனர்.

ரோஹிங்கியா பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் இடம்பெறுகின்றன. பல இலட்சக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் பெரும் சிரமத்திற்கு மத்தியிலும் எந்தவொரு வாழ்வாதார உதவிகள் இன்றியும் வாழ்கின்றார்கள்.

இந்த நிலையில் இவர்கள் படகுகள் மூலம் நாட்டைவிட்டு தப்பி பங்காளாதேஷ், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு செல்லும் சம்பவங்கள் தொடருகின்றன.

இதில் பல ஆயிரக்கான மக்கள் மலேசியாவை வந்தடைந்த அதேநேரம் பல நூற்றுக்கணக்கான மக்கள் கடலில் இறந்து போவதும் தொடர்ந்து நடக்கும் அவலமாகும்.

30 Dec 2014  :

ஐநா பொதுச்சபையில் ரோஹிங்கியாக்களுக்கு முழு பிராஜா உரிமை வழங்கவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டு பெரும்பான்மை வாக்குகளுடன் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

20 Jan 2015 :

 இந்த தீர்மானத்தின் பிறகு சீற்றமடைந்த சர்ச்சைக்குரிய பிக்குவான அசின் விராது பர்மா தொடர்பான ஐநாவுக்கான விஷேட பிரதிநிதி யங்கி லீ அம்மையாரை “விபச்சாரி ”என்று பகிரங்கரமாக திட்டுகிறார்.

March- April 2015 :

ரோஹிங்கியா அகதிகள் கடலில் தத்தளிப்பதும் பக்கத்தில் இருக்கும் எந்தவொரு நாடும் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் மீண்டும் ரோஹிங்கியா சார்பான அலையை உலகில் தோற்றுவித்து இருக்கிறது.
Tags:
Privacy and cookie settings