SR 71 பிளாக் பேட் என்று அழைக்கப்படும் போர் விமானம் அமெரிக்காவால் வடிவமைக்கப் பட்டது. இதனை அவர்கள் 1967 ல் வடிவமைத்தார்கள் என்றால் எவராலும் நம்ப முடியாது.
இப்படியான ஒரு வடிவமைப்பை அமெரிக்காவால் எப்படிச் செய்ய முடிந்தது என்ற ஆச்சரியம் தோன்றும். குறித்த இந்த தாக்குதல் விமானம் ராடர் திரைகளில் அகப்படாது.
இதுவரை மிகவும் வேகமாகச் செல்லக்கூடிய அதி நவீன தாக்குதல் மற்றும் வேவு பார்க்கும் விமானம் என்ற பெயரை இது பெற்றுள்ளது.