வெளியூருக்கு செல்கிறீர்களா? விடுதிகளில் கவனிக்க வேண்டியது !

வெளியூருக்கு சுற்றுலாவாக அல்லது அலுவல் விசயமாக செல்ல நேரிடும் பொழுது அங்கு தங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.  
வெளியூருக்கு செல்கிறீர்களா? விடுதிகளில் கவனிக்க வேண்டியது !
அப்பொழுது நமக்கு உடனடி தீர்வாக இருப்பது தங்கும் விடுதிகள். ஆனால், நாம் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் அது ஆபத்தான விவகாரங்களில் நம்மை சிக்க வைத்து விடும் அபாயம் உள்ளது.

கடந்த வருடம் பிரபல செய்தி சேனலின் பெண் நிருபர் ஒருவர் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாகீ நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி யுள்ளார்.
அவர் ஆடைகளின்றி இருக்கும் புகைப் படங்களை இல்லினாய்ஸ் மாகாணத்தை சேர்ந்த ஒருவன் எடுத்துள்ளான்.

பெண் நிருபர்

இது தொடர்பான வழக்கு விசாரணை லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. அதில் குற்றத்தை அந்நபர் ஒத்து கொண்டான். பெண் நிருபர் அறையில் தங்கி இருந்துள்ளார். 

ஆனால், கதவை பூட்டும் சாவி துவாரம் வழியே கேமிரா உதவியுடன் அறையில் நடந்தவற்றை கண்காணித்து புகைப் படங்களாக அந்த நபர் எடுத்துள்ளான். 

குற்றத்தை ஒத்து கொண்ட அவனுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது. ஓட்டல் மற்றும் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கும் பொழுது அதிக எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும் என 

வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள வின்ஸ்டன் நகரின் பீச்மாண்ட் ஓட்டலின் தலைமை செயல் அதிகாரி மைக்கேல் பாரஸ்ட் ஜோன்ஸ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், கதவின் சாவி துவாரத்தை நன்றாக பரிசோதித்து பாருங்கள். அது உடைந்து இருந்தால் அல்லது சேதப்படுத்தப்பட்டு இருந்தால் வேறு அறையை கேளுங்கள்.
உங்களுக்கு சந்தேகம் எழுந்தால் அது குறித்து உடனடியாக ஓட்டல் நிர்வாகத்திடம் தெரிவியுங்கள் என தெரிவித்துள்ளார். ஓட்டல் அறையின் கதவின் உள்புறம் வழியே சாதாரணமாக பாருங்கள்.

கேமிரா அபாயம்

எளிதாக மறுபுறம் பார்க்க முடிந்தால் அது தெளிவாக இருக்கிறது என கொள்ளலாம். மாறாக, ஏதேனும் படலம் படிந்து இருப்பது போன்று தென்பட்டால் உடனடியாக எச்சரிக்கை கொள்ள வேண்டும். 

அரிதாக நடைபெறும் இத்தகைய சம்பவங்களின் போது, கதவின் சாவி துவாரத்தின் உள்ளே கேமிரா பொருத்தப்பட்டு இருக்கலாம். அது வெளியே இருந்து உள்ளே நடப்பதை பார்க்கும் படியாக வைக்கப்பட்டு இருக்கலாம். 
நம்மூரில், புதிய துணிகளை எடுக்கும் பொழுது அதனை அணிந்து பார்ப்பதற்காக அதற்கான உடை மாற்றும் அறையில் 
இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற தாக செய்திகள் வெளி யானாலும், பெரும் பாலான இடங்களில், எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
Tags:
Privacy and cookie settings