சான் பிரான்சிஸ்கோ: உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசார்ட், 2015ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வரலாறு காணாத அளவில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 3.2 பில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்துச் சந்தையில் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
(விண்டோஸ் பயனாளிகள் அனைவருக்கும் "விண்டோஸ் 10" இலவசம்!! மைக்ரோசாப்ட் அறிவிப்பு..)
எல்லாதுக்கும் நோக்கியா தான் காரணம்!
இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில், நோக்கிய நிறுவனத்தின் மொபைல் விற்பனை குறைந்ததாலும்,
மக்கள் மத்தியில் விண்டோஸ் ஓஎஸ் தேவைகள் குறைந்து வருவதாலும் 3.2 பில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அப்படியா?
மைக்ரோசாப்ட் நிறுவன சீஇஓ சத்ய நாடெல்லா இப்படி பேசிட்டாரே?
நோக்கியா
2014ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நேக்கிய மொபைல் வர்த்தகத்தை மேம்படுத்தும் பொருட்டுச் சுமார் 7.5 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்தது.
இதன் தொடர்ச்சியாக நிறுவனத்தின் நிதி நிலை அதிகளவில் பாதிப்படையத் துவங்கியது.
சத்ய நாடெல்லா என்ன செய்கிறார்?
இன்றைய சூழ்நிலையில் சாப்ட்வேர் துறையில் வெற்றி பெற முக்கியத் தொழில்நுட்பமான கிளவுட் சேவைகளில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்தியதால்
காரணமாகச் சத்ய நாடெல்லா ஓஎஸ் வர்த்தகத்தைக் கவனிக்க முடியவில்லை. நிறுவனம் நஷ்டம் அடைந்ததற்கு இதுவும் முக்கியக் காரணம் என முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.
விண்டோஸ் விற்பனை சரிவு
2வது காலாண்டில் விண்டோஸ் ஓஎஸ் விற்பனை சுமார் 22 சதவீதம் சரிந்துள்ளது. இதன் காரணமாகவே மைக்ரோசாப்ட் லாபத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
ஆட்குறைப்பு
இந்நிலையில் இந்நிறுவனத்தில் சுமார் 7800 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
4 சதவீத சரிவு
இந்நிறுவன முடிவுகள் வெளியான அடுத்தச் சில நொடிகளில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 4 சதவீதம் வரை குறைந்து 45.38 டாலருக்கு விற்கப்பட்டது.
அட கொன்னியா!!
ஆண்டுக்கு 525 கோடி ரூபாய் சம்பளம்.. யாருக்குத் தெரியுமா?
ச்சசாா...
பெண்கள் சம்பள உயர்வு எல்லாம் கேட்க கூடாது சத்யா பேசும் பேச்சைப் பாருங்க!