கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள போலீஸ் அகாடமியில் நேற்று நடைபெற்ற விழாவில் அந்த மாநில உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா கலந்து கொண்டார்.
அவர் விழா மேடைக்கு வந்த போது, அதில் அமர்ந்து இருந்த போலீஸ் அதிகாரிகள் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.
ஆனால் கூடுதல் டி.ஜி.பி. ரிஷிராஜ் சிங் எழுந்திருக்காமல் தொடர்ந்து இருக்கையில் அமர்ந்து இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட படம் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சர்ச்சை எழுந்தது.
இதுபற்றி கொச்சியில் மந்திரி ரமேஷ் சென்னிதலாவிடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது, இந்த சம்பவம் தொடர்பாக தான் யார் மீதும் புகார் செய்யவில்லை என்றும், அந்த நிகழ்ச்சியின் போது மரபு மீறப்பட்டதா? என்பது குறித்து டி.ஜி.பி.தான் கண்டுபிடித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
சர்ச்சைக்கு உள்ளான கூடுதல் டி.ஜி.பி. ரிஷிராஜ் சிங் கூறுகையில்,
விழா மேடைக்கு மந்திரி பின்புற வாசல் வழியாக வந்ததாகவும், அதனால் அவர் வந்ததை தான் கவனிக்கவில்லை என்றும் தெரிவித்தார்