தனக்கு ஒருநாள் மனைவியாக இருந்தால்தான் முனைவர் பட்டம் வாங்க முடியும்` என்று தனது ஆங்கிலத்துறை பேராசிரியர் ப்ளாக்மெயில் செய்து பள்ளி கொள்ள அழைத்ததாக மாணவி ஒரு பகீர் புகார் செய்துள்ளார்.
கோவையை சேர்ந்த அனிதா ராஜன் முழுநேர ஆங்கில பி.எச்.டி., படிப்பிற்காக 2010ம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளார்.
உடல் நலகுறைவு காரணமாக படிப்பை சரிவர தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பின்னர் மீண்டும் படிப்பை தொடர முடிவு செய்த போது, அந்த பல்கலை கழகத்தில் ஆங்கில மொழியியல் மற்றும் இலக்கியவியல் துறையின் தலைவராகவும்,
சிண்டிகேட் உறுப்பினராகவும் இருக்கும் பேராசிரியர் சரவண செல்வன் தன்னுடன் ஒருநாள் ‘தங்கினால் தான்’ முனைவர் பட்டம் பெற முடியும் என்று மிரட்டுவதாக மாணவி புகார் கூறியுள்ளார்.
சரவண செல்வன் மீது பல்கலை கழக பதிவாளர் மற்றும் துணை வேந்தரிடம் புகார் அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட மற்றொரு சிண்டிகேட் உறுப்பினரான ஜெயக்குமாரும் தம்மை `ஒத்துழைத்து போகும்படி` அறிவுறுத்தியதாக மாணவி கூறியுள்ளார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தற்காக கடந்த 2010-ம் ஆண்டு பேராசிரியர் சரவண செல்வன் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாணவி கூறினார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு மாணவி புகார் மனு அளித்துள்ளார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு மாணவி புகார் மனு அளித்துள்ளார்.