ஈபிள் டவர் முன்பு நிர்வாண செல்பி எடுத்த மாடல் அழகி !

1 minute read
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் ஈபிள் கோபுரம் முன்பு நிர்வாணமாக செல்பி எடுத்து கொண்டதற்காக‌ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 ஈபிள் டவர் முன்பு நிர்வாண செல்பி எடுத்த மாடல் அழகி !
மாடல் அழகியான‌ மிலோ மொய்ரி (31) சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர். இவர் சுவிட்சர்லாந்து மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் உள்ள புகழ்பெற்ற இடங்களுக்குச் சென்று நிர்வாண செல்பி எடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று, பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு சென்ற மிலோ, ஈபிள் கோபுரம் முன்பு நிர்வாண செல்பி எடுத்தார்.

பின்னர், ஈபிள் கோபுரத்துக்கு கீழேயுள்ள டிரோகடோரா பகுதிக்கு சென்ற மிலோ, அங்கு வரும் சுற்றுலா பயணிகளுடன் சேர்ந்து நிர்வாணமாக செல்பி எடுத்துக் கொண்டார்.

பிரான்ஸ் நாட்டில் ஆண்களும், பெண்களும் தங்களது அந்தரங்க உடல் உறுப்புகள் தெரியும் வகையில் பொது இடங்களில் உலா வருவது குற்றமாகும்.  
அவ்வாறு உலா வருபவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில், மிலோவின் இந்த நடவடிக்கையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.

பின்னர், மிலோ சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரிடம் அபராதம் எதுவும் வசூலிக்காமல் ஒரு இரவு மட்டும் காவலில் வைத்து விட்டு பின்னர் விடுதலைச் செய்து விட்டனர்.
Tags:
Today | 1, April 2025
Privacy and cookie settings