குடிநீர் கேனுக்குள் செத்து கிடக்கும் கரப்பான்பூச்சி.. சவுதி !

சவுதி அரேபியாவின் ஜிஸான் மாகாணத்தில் விலை கொடுத்து, கடையில் வாங்கிய குடிநீர் கேனுக்குள் செத்து மிதக்கும் கரப்பான் பூச்சியை 
குடிநீர் கேனுக்குள் செத்து கிடக்கும் கரப்பான்பூச்சி.. சவுதி !
பார்த்து அதிர்ச்சியடைந்த ஒருவர் இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.

தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஒரு கடையில் குடிநீர் கேனை வாங்கி வந்த அந்த நபர், அதை உபயோகிப்பதற்காக திறக்கச் சென்றபோது, உள்ளே ஒரு செத்துப்போன கரப்பான்பூச்சி தென்பட்டது.

இதையடுத்து, அந்த கேனின் ’சீலை’ திறக்காத அவர், அந்த காட்சியை தனது செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்தார்.

அந்த ஆதாரத்துடன், ஜிஸான் மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings