இங்கிலாந்தில் ஓடும் காரில் தனக்குத் தானே பிரசவம் பார்த்த இளம் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக தனது கணவருடன் காரில் ஹூஸ்டனை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்த பெண் பிரசவ வலியால் அவதிப்படுகிறார்.
அடிவயிற்றில் சீட் பெல்ட்டை மாட்டி குழந்தை பிறப்பதை தள்ளிப் போட முயற்சிக்கும் அந்த பெண், அது முடியாமல் போகவே, இறுதியில் தனது குழந்தையை தானே பிரசவிக்கிறார்.
எந்த பரபரப்பும் இன்றி குழந்தையை கையில் தூக்கிய அவர், குழந்தையை தடவிக் கொடுத்து சீராக மூச்சுவிடச் செய்தார்.
இவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தாய்மையின் மேன்மையை உணர்த்துவதுடன், சிக்கலான சூழ்நிலையில் எவ்வாறு சாமர்த்தியமாக செயல்பட வேண்டும் என்பதையும் உலகிற்கு எடுத்துரைத்துள்ளது.
பிரசவ வலியை எதிர்கொள்ள இயலாமல் பல பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் காலம் இது.
இந்த நிலையில் ஓடும் காரில் பெண் ஒருவர் தனக்குத் தானே சுயமாக பிரசவம் பார்த்த நிகழ்வு இங்கிலாந்து மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.