மதுரை செல்லூரை சேர்ந்தவர் எஸ்.ஆர்.தங்கராமன். மதுரை பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார்.
இவரது மாமா ராஜவடிவுக்கு உசிலம்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியில் கல்குவாரி உள்ளது. இதனை எஸ்.ஆர்.தங்க ராமனே நிர்வகித்து வந்தார். இதனால் கல்குவாரி சென்ற அவர் அங்கு அலுவல் பணிகளை கவனித்தார்.
அப்போது தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் உக்கிரபாண்டி, தி.மு.க. வட்ட செயலாளர் பவுன்ராஜ் உள்பட 50 பேர் அங்கு பயங்கர ஆயுதங்களுடன் கார் மற்றும் ஆட்டோக்களில் வந்தனர். அவர்கள் கல்குவாரியில் இருந்த ஆடு, மாடுகளை அடித்து விரட்டினர்.
இதனை அங்கிருந்த எஸ்.ஆர்.தங்கராமன், தட்டிக் கேட்டார். அப்போது அவரையும் 50 பேர் கும்பல் தாக்க முயற்சித்தது.
ஆனால் அங்கிருந்து எஸ்.ஆர்.தங்கராமன் தப்பிவிட்டார். இதனை தொடர்ந்து குவாரியில் நின்றிருந்த மோட்டார் சைக்கிள்களை அந்த கும்பல் தாக்கி சேதப்படுத்திவிட்டு சென்றது.
இது குறித்து சிந்துப்பட்டி போலீசில் எஸ்.ஆர்.தங்க ராமன் புகார் செய்தார். அதன்பேரில் கவுன்சிலர் உக்கிரபாண்டி, வட்டச் செயலாளர் பவுன்ராஜ், மனோகரன் உள்ளிட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அத்துமீறி நுழைதல், பயங்கர ஆயுதங்களுடன் தாக்க முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.