உலகின் அதி அற்புதமான கடல் பயணத்தை சாத்தியமாக்கி இருக்கின்றன ராயல் கரீபியன் சொகுசுக் கப்பல்கள்.
ராயல் கரீபியன் இங்கிலாந்து ஐரோப்பிய அமெரிக்க மற்றும் உலக நாடுகளின் கடல் பரப்பில் இந்த கப்பல் பயணம் செய்யும்.
பெரும் பணக்காரர்கள் மட்டுமல்ல, சொகுசு பயண விரும்பிகளும் இந்த கப்பல்களில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு கப்பலும், ஒரு அனுபவத்தைக் கொடுக்கும்.
உலகின் பல நாடுகளின் கடல் அழகை விருந்தளிக்கும் இந்த கப்பல் நிறுவனத்திற்கு அடுத்த வரவாக வந்துள்ளது Anthem of the seas சொகுசுக் கப்பல்.
பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இந்த கப்பல் பயண அனுபவம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
கப்பலின் பின்பக்கம் உள்ள இந்த பகுதியில் ஹாயாக உட்கார்ந்து நேரத்தை போக்கலாம்.
இதன் எடை 1,67,800 டன், நீளம் 348 மீட்டர். 18 அடுக்குகளை கொண்ட இந்த கப்பலில் ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 4,900 பேர் பயணிக்கலாம்.
சிக் கலையம்சத்துடன் உணவுகளை பரிமாறும் மற்றுமொரு உணவகம். வெள்ளை மற்றும் தங்க நிற பின்னணியில் வடிவமைக்கப்பட்ட அரங்கில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதில் உங்களை நீங்கள் மறக்கலாம்.
ஜமீ’ஸ் இத்தாலியன் இத்தாலியின் புகழ்பெற்ற சமையல் கலைஞர் ஜமீ ஆலிவரது உணவகம்.
வீட்டில் இருப்பது போன்ற உள் அலங்காரம். உணவுகளிலும் பாரம்பரிய சுவை. உங்கள் உணவுகளை காதலோடு தயாரிக்கிறோம் என அறிவிக்கிறார்கள்.
பிறகென்ன? சில்க் ஆசிய உணவுகளின் சங்கமம் சில்க் உணவகம். மஞ்சள், சீரகம், மற்றும் சிவப்பு மிளகாய் என ஆசிய மசாலாக்கள் சேர்த்த உணவுகளை ருசிக்கலாம்.
சைனீஸ், ஜப்பனீஸ், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்திய பாரம்பரிய உணவுகள் பயணிகளை வசப்படுத்தும். நீர் சறுக்கு கப்பலின் மேல் தளத்தில் நீர் சறுக்கு விளையாட்டும் உள்ளது.
40 அடி உயரத்திலிருந்து சறுக்கி விழுவது போல நீர் விளையாட்டுகள் உள்ளது. சீ பிளிக்ஸ் பெரிய அளவிலான உள் விளையாட்டு அரங்கம் உள்ளது.
பேஸ்கட்பால், பம்பர் கார், ரோலர் ரிங், என பல பொழுது போக்கு அம்சங்களும் இந்த தளத்தில் உள்ளன. தி கிராண்டி கண்ணாடிகள் சூழ்ந்த இரவு நேர உணவகம்.
ஐரோப்பிய புதிய உணவுகளை இங்கு உண்ணலாம். இதற்கு தனி கட்டணமில்லை. உல்லாச பிரியர்களுக்காக ராயல் கரீபியனின் அன்பளிப்பு.
அமெரிக்கன் ஐ கான் கிரில் அமெரிக்க சாலை பயணத்தில் கிடைக்கும் உணவு வகைகளை இங்கு விருந்து படைக்கிறார்கள்.
கையில் உணவு தட்டுகளை பிடித்துக் கொண்டே கடலை ரசிக்கலாம். அமெரிக்காவின் உள்ளூர் உணவுகள் உலக தரத்தில் கிடைக்கும்.
டிவைன்லி டிகடென்ஸ் 500 கலோரிகளுக்கு கீழே உள்ள உணவுகள் இங்கு சிறப்பு. உலகப் புகழ் பெற்ற சமையல் கலைஞர் டெவின்ஸ் அலெக்ஸாண்டர் சமையல் திறனில் நீங்கள் மெய் மறக்கக்கூடும்.
மைக்கேல் பஃப் பல விருதுகளைப் பெற்ற மியாமியைச் சேர்ந்த சமையல் கலைஞர் மைக்கேல் செக்வார்ட்ஸ் உணவகம்.
மது பானங்களுடன் அவரது கை வண்ணத்தில் உருவான இனிப்புகள், ஸ்நாக்ஸ் என அனைத்து வகைகளும் கிடைக்கும்.
இசை அரங்கம் தீவிர இசை பிரியர்களுக்கு விருந்தளிக்கும் அரங்கம். ஜாஸ் பாண்டு என லைவ் மியூசிங் கொண்டாட்டம்.
வொண்டர்லேண்ட் நீர் நிலம் காற்று நெருப்பு வானம் மற்றும் உங்கள் கனவு என இந்த உணவகத்துக்கு அழைக்கின்றனர். சுடச்சுட ஆவிபறக்க, அல்லது குளிர் படலம் கிளம்ப இங்கு விருந்து உண்ணலாம்.
ராஜ அலங்காரத்துடன் 62 இருக்கைகள் கொண்ட உணவகம். நார்த் ஸ்டார் கப்பலின் மேல்தளத்திலிருந்து இந்த கண்ணாடி கூண்டுக்கு செல்ல வேண்டும்.
கடல் மட்டத்திலிருந்து 300 அடி உயரத்தில் உள்ள கண்ணாடி கூண்டின் மூலம் 360 டிகிரி சுற்றில் பார்க்கலாம். உங்கள் உடம்மையும் மனசையும் ஒரே நேரத்தில் அந்தரத்துக்கு அழைத்துச் செல்லும்.
பயோனிக் பார் மிக்ஸாலஜி தொழில்நுட்பத்தில் அமைந்துள்ள, முழுமையான ரோபோ சேவை மதுபான கூடம்.
தேவையானதை குறிப்பிட்டால் ரோபோ சரியாக அளவில் கொடுக்கும். தலைகீழாக தொங்கும் பாட்டில்களைப் பார்ப்பதே அழகு தான்.