என்ஜினீயரிங் படிப்பில் சேர அனுமதி கிடைக்காத 18 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து கசர்வடவாலி காவல் நிலையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, போலீஸ் அதிகாரி ஒருவரின் மகள் அதிதி போஸ்லே என்பவருக்கு என்ஜினீயரிங் படிப்பில் சேர அனுமதி கிடைக்கவில்லை. இதனால் வருத்தமடைந்துள்ளார் அதிதி.
இந்நிலையில் அவர் தங்கியிருந்த கட்டிடத்தின் 9வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அவரது தந்தை இரவில் எழுந்து பார்த்துள்ளார். அதிதி படுக்கையில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதன்பின்னர், வீட்டு வளாகத்தில் இருந்த கார் ஒன்றின் மீது அதிதி கிடந்துள்ளதை அவரது தந்தை பார்த்துள்ளார் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
அவரை உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார். ஆனால் அங்கு, அதிதி மரணமடைந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிதியின் பையில் இருந்து தற்கொலை குறிப்பு ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. இது தற்செயலாக நடந்த மரணம் என வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என போலீசார் கூறியுள்ளனர்.