ஊழியர்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அனுமதி பெற வலியுறுத்தும் நிறுவனம்

1 minute read
0
சீனாவிலுள்ள நிறுவனமொன்று, தனது ஊழியர்கள் கர்ப்பமடைவதற்கு தன்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என நிபந்தனை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


சீனாவின் மத்திய பிராந்தியத்திலுள்ள ஜியாவோஸோ நகரிலுள்ள நிதி நிறுவனமொன்றே இக்கொள்கைத் திட்டம்  குறித்து திட்டத்தை அறிவித்துள்ளது.

"ஒரு வருடகாலத்துக்கு அதிகமாக பணியாற்றும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு மாத்திரமே "பிரசவத் திட்டத்துக்கு" விண்ணப்பிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பணிக்கு இடையூறு ஏற்படும் வகையில், கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு 1000 யுவான் (சுமார் 21,000  ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும்  அந்நிறுவனம் விதிகளை மீறுவோருக்கு பதவி உயர்வுகள், வருடாந்த போனஸ் போன்றவை வழங்கப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பாக சீன ஊடகங்களிலும், சமூக வலைத் தளங்களிலும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தனது ஊழியர்களுக்கு இவ்விதிகள் தொடர்பான அறிவித்தலை அனுப்பியதை  மேற்படி நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆனால், அது ஊழியர்களின் கருத்துக் கேட்பதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணமாகவே தற்போது உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.


பட்டதாரிகளான பெரும் எண்ணிக்கையான பெண்கள் அண்மையில் இந்நிறுவனத்தில் இணைந்ததாகவும் அவர்கள் அனைவரும் ஒரே தடவையில் கர்ப்பிணியாகுவதை தவிர்ப்பதற்காக இத்திட்டம் முன்வைக்கப்பட்டதாகவும் அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 14, March 2025
Privacy and cookie settings