தஞ்சை மாவட்டம் வில்வராயன்பட்டி செல்லும் சாலையோரத்தில் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை இன்று காலை துணியில் சுற்றப்பட்டு கிடந்தது. சாலையில் நடந்து சென்ற சிலர் அக்குழந்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தை உடல் முழுவதும் எறும்பு மொய்த்தபடி இருந்தது. அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அப்பகுதியில் இருந்த மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் ராஜா மற்றும் சிலர் பெண் குழந்தையின் உடலில் இருந்த எறும்புகளை அகற்றினர்.
பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உடனடியாக வந்து சாலையோரம் கிடந்த பெண் குழந்தையை எடுத்து பூதலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தார்.
அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தையை பெற்றெடுத்தவர் யார்? எதற்காக சாலையோரம் வீசினார்கள்? என்பது தெரியவில்லை.
குழந்தையின் தொப்புளில் பிளாஸ்டிக் கிளிப் போடப்பட்டுள்ளது. இதனால் இக்குழந்தை ஏதோ மருத்துவமனையில் தான் பிறந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.