கொள்ளேகால் தாலுகா ஹனூர் அருகே பீஜி பாளையா கிராம பஞ்சாயத்து தேர்தலில் 5–வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சிவகுமார் என்பவர் போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.
இந்த தோல்விக்கு முக்கிய காரணம், 5–வது வார்டுக்கு உட்பட்ட நல்லிமரதொட்டியை சேர்ந்த மக்கள் தான் என எண்ணி சிவகுமார் அந்த பகுதி மக்கள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார்.
இதனால் நல்லிமரதொட்டி பகுதி மக்களை பழிவாங்க முடிவு செய்தார். அதன்படி நேற்று சிவகுமார், நல்லிமரதொட்டி பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்தார்.
இதனால் அந்த பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த 18 மின்மோட்டார்களுக்கும், 28 வீடுகளுக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அறிந்த அந்தப் பகுதி மக்கள், ஹனூர் போலீசாருக்கும், மின்வாரியத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே போலீசாரும், மின்வாரியத்தினரும் விரைந்து வந்து, சிவகுமாரை சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் நல்லிமரதொட்டி பகுதிக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.