கலாமை பாதித்த காந்தியின் படம்

நமது மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்வில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியது மகாத்மாவின் ஒரு புகைப்படம். அதுபற்றிய கலாமின் நினைவுப்பதிவு..
 
""கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி, உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். நான்தான் மாணவர் தலைவன். ஆசிரியர் என்னை அழைத்தார். "இன்று நள்ளிரவு நமக்கு சுதந்திரம் கிடைக்கப் போகிறது. எல்லா மாணவர்களையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்துவிடு'' என்றார்.

நானும் அவ்வாறே செய்தேன். நேரு நமது தேசியக் கொடியை ஏற்றினார். அவர் இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசினார். நான் தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவன். எதுவும் எனக்குப் புரியவில்லை. 

அடுத்த நாள், தமிழ் நாளிதழ்களில் இரண்டு படங்கள் வெளியாகியிருந்தன. ஒன்று, நேரு கொடியேற்றுவது. இரண்டாவது, மதக் கலவரத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த நவகாளி வீதியில் செருப்புகள்கூட இல்லாமல் காந்திஜி நடந்து செல்லும் புகைப்படம். 
அந்தப் படம்தான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது என்று பதிவிட் டுள்ளார்.
Tags:
Privacy and cookie settings