மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் இன்று திங்கள் கிழமை கருத்தரங்கு நடை பெற்றது. அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்(84) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மாலை 6 மணியளவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கலாம் பெத்தானி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இரங்கல் செய்தியில், கலாம் மறைவு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு எனவும். இந்தியா சிறந்த வழிகாட்டியை இழந்து விட்டது என்று மோடி தெரிவித்துள்ளார்.