மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் விமான நிலையத்திற்கு பறந்து கொண்டிருந்த விமானத்தில் கார்பன் மோனாச்சைடு கியாஸ் கசிந்ததாக
சந்தேகம் எழுந்ததால் விமானம் ஜெர்மனியில் உள்ள பெர்லின் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப் பட்டது. ஈசிஜெட் நிறுவனத்தின் அந்த விமானம் 175 பயணிகள்
மற்றும் 6 ஊழியர்களுடன் நேற்று மாலை புறப்பட்டுச் சென்றபோது கேபினில் இருந்த 3 ஊழியர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
கார்பன் மோனாக்சைடு கசிந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. கேபினில் இருந்து கியாஸ் வெளியேறுகிறதா? அல்லது வெளிப்புறத்தில் இருந்து வருகிறதா? என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
அதேசமயம் விமானத்திற்குள் இருந்தவர்கள் சிலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து விமானம் பெர்லினில் அவசரமாக தரை யிறக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பயணிகளில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
ஆனால், கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் தான் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட வில்லை.