வகுப்பறையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த 7ம்வகுப்பு மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர். கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
நேற்று முன்தினம் 7ம்வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது கடைசி பெஞ்ச்சில் அமர்ந்திருந்த மாணவிகள் சிலர் பாடத்தில் கவனமின்றி இருப்பதை கவனித்தார்.
பல முறை எச்சரித்தும் மாணவிகள் தொடர்ந்து சிரித்து பேசுவதும், புத்தகத்திற்குள் செல்போனை மறைத்து வைப்பதுமாக இருந்தனர். இதனால் எரிச்சலடைந்த ஆசிரியை கடைசி பெஞ்ச் மாணவிகளை எழுந்து வரச்செய்தார். அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன்களை பறிமுதல் செய்தார்.
பதற்றமடைந்த மாணவிகள் செல்போன்களை திருப்பி அளிக்கும்படி கெஞ்சத் தொடங்கினர். பாடத்தில் கவனமின்றி செல்போன்களில் விளையாடுவது தவறு.
தலைமை ஆசிரியையிடம் கொடுத்து விடுகிறேன். அவரிடம் செல்போன்களை பெற்றுகொள்ளுங்கள் என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் ‘மரியாதையாக செல்போனை கொடுங்கள்’ என மிரட்டத் துவங்கியுள்ளனர்.
இதனால் பயந்துபோன ஆசிரியை பக்கத்து வகுப்பு டீச்சரிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். அப்போது அவரிடம் இருந்த செல்போன்களை அந்த டீச்சர் வாங்கிப் பார்க்கையில் அதில் ஆபாசபடங்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி தாளாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைமை ஆசிரியையிடம் செல்போன்கள்கள் ஒப்படைக்கப்பட்டன. செல்போனில் ஆபாசபடம் பார்த்த 7மாணவிகளும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்துள்ளது.
இந்தநிலையில், பள்ளித்தாளாளர் 7மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து நடந்த சம்பவங்களை விளக்கி அவர்களுக்கு அறிவுரை தந்து மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே நடந்த சம்பவத்துக்கு மாணவிகளிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து 7மாணவிகளையும் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் சங்ககூட்டம் நடத்தி மாணவ, மாணவிகளின் ஒழுக்கம் குறித்தும் கண்டிப்பும், கவனிப்பும் மிக அவசியம் என்பதையும் வலியுறுத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.