இப்ராகிம் ராவுத்தர் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் அறிக்கை !

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் ஆர்.சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் கூட்டாக வெளி யிட்டுள்ள இரங்கல் அறிக்கை யில் கூறியிரு ப்பதாவது:

ராவுத்தர் என்று தமிழ் திரையுலகினரால் செல்லமாக அழைக்கப்பட்ட அ.செ.இப்ராகிம் ராவுத்தர், ‘கேப்டன் பிரபாகரன்’, ‘புலன் விசாரணை’ போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்தவர்.

திரைப்பட கல்லூரியில் படித்து வந்த பல இளம் இயக்குனர்க ளுக்கு வாய் ப்பளித்தவர். பல புதிய இயக்குனர்கள் உருவாக காரண மானவர். திரைப்பட தொழிலா ளர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு அளித்தவர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தலை வராக பதவி வகித்தவர்.

அன்பானவர், பண்பானவர், அனைவரிடமும் இன்மு கத்தோடு பழகக் கூடியவர். அப்படிப்பட்ட நல்மனிதர் மறைவு திரையு லகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். எனவே அவரின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரை இழந்து வாடும் குடும் பத்தினர் மற்றும் நண்பர் களுக்கு நெஞ்சார்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Tags:
Privacy and cookie settings