பவர் ஆப் அட்டர்னி எதற்காக?

சொத்து விற்பனை பரிவர்த்தனையில் ‘பவர்’ என்ற சொல் புழக்கத்தில் இருக்கிறது. 


தனது சொத்தை விற்பனை செய்ய நினைப்பவர் அந்த செயலில் நேரடியாக ஈடுபடமுடியாத நிலையில் இருக்கலாம்.

அப்படிப்பட்ட சூழலில் சொத்தை நிர்வகிக்க, விற்பனை செய்து கொடுக்க தனது சார்பில் அதிகாரம் பெற்ற ஒருவரை நியமிப்பது ‘பவர் ஆப் அட்டர்னி’ எனப்படுகிறது.

பலவகை பயன்பாடு

அவர் எழுதி கொடுக்கும் அந்த அதிகார ஆவணம் எந்த வகையை சார்ந்தது என்பது முக்கியம்.

ஏனென்றால் சொத்தை விற்பனை செய்வதற்கு மட்டுமே ‘பவர்’ எழுதிக்கொடுக்கப்படுவதில்லை.

சொத்தை வாங்குவதற்கு, விற்பனை செய்வதற்கு, இருக்கும் இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு,

வாடகைக்கு விடுவதற்கு, சொத்தை நிர்வகிப்பதற்கு என பலதரப்பட்ட பயன்பாட்டிற்கு கூட பவர் அதிகாரம் கொடுக்கப் பட்டிருக்கலாம்.

ஒருவேளை சொத்தை விற்பதாக இருந்தாலும் அதற்கு முந்தைய நிலையான விற்பனை ஒப்பந்தம் போட்டுக் கொள்வதற்கு மட்டுமே அதிகாரம் வழங்கப் பட்டு இருக்கலாம்.

ஏனென்றால் விற்பனை ஒப்பந்தம் என்பதும், விற்பனை ஆவணம் என்பதும் வெவ்வேறு சாரம்சங்களை கொண்டவை. 

இதில் விற்பனை ஒப்பந்தம் மட்டுமே போடுவதற்கு அதிகாரம் பெற்ற நபர் நேரடியாக சொத்தை விற்பனை செய்ய முடியாது.

உறுதி செய்ய வேண்டும்.

அவர் அந்த சொத்தை விற்பனை செய்வது தொடர்பாக அதை வாங்குபவருடன் ஒப்பந்தம் மட்டுமே செய்து கொள்ள முடியும்.

அப்படி ஒப்பந்தம் மட்டுமே போட்டுக்கொடுக்க அதிகாரம் பெற்றவர் சொத்தை எழுதி பதிவு செய்வது தொடர்பாக விற்பனை ஆவணம் எழுதித்தர முடியாது. 

அப்படி எழுதித்தந்தாலும் அது செல்லுபடி ஆகாது.

ஆகவே ‘பவர்’ வைத்திருப்பவருக்கு சொத்தை விற்பனை செய்வதற்கு முழு அதிகாரமும் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது.

அவரிடம் இருக்கும் ‘பவர்’ சொத்தை விற்பனை செய்வதற்குரிய வகையை சார்ந்ததா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அத்துடன் அந்த ‘பவர்’ செல்லத்தக்கதாக இருக்கிறதா? என்றும் பார்க்க வேண்டும். 

ஏனெனில் பவர் கொடுத்த உரிமையாளர் அதை ரத்து செய்தும் இருக்கலாம். அப்படி இருந்தால் பவர் வைத்திருப்பவர் சொத்து விற்பனையை மேற்கொள்ள முடியாது.

ஒருவேளை பவர் ரத்து செய்யப்பட்டதை மறைத்து சொத்தை விற்பனை செய்திருந்தாலும் அது செல்லுபடியாகாது. அதனால் சொத்தை வாங்கியவர் தான் பாதிப்புக்கு ஆளாக கூடும்.



உரிமையாளர் பற்றிய விசாரணை

இந்த பிரச்சினையை தவிர்க்க பவர் வைத்திருப்பவர் மூலம் சொத்து வாங்குவதாக இருந்தால் 

அவருக்கு அந்த அதிகாரத்தை கொடுத்த சொத்தின் உரிமையாளரை நேரடியாக சந்தித்து பவர் உரிமை செல்லத் தக்கதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

 

அதை விட முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. நீங்கள் சொத்து வாங்கும் சமயத்தில் 

அவருக்கு பவர் அதிகாரம் கொடுத்த சொத்தின் உரிமையாளர் உயிரோடு தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

ஏனெனில் பவர் அதிகாரம் கொடுத்தவர் உயிரோடு இருந்தால் தான் அந்த பவர் ஆவணம் செல்லும். 

அவர் இறக்கும்போது அவர் கொடுத்த பவர் அதிகாரமும் சேர்ந்தே மடிந்து விடுகிறது.

எனவே பவர் மூலம் சொத்து வாங்கும்போது அதன் உரிமையாளர் உயிரோடு தான் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அதிகாரம் செல்லாது

அதிலும் விற்பனை செய்ய வருபவர் பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்த பவர் அதிகார ஆவணத்தை வைத்திருந்தால் விழிப்புடன் இருக்க வேண்டும். 


உடனே சொத்தின் உரிமையாளர் பற்றிய தகவல்களை விசாரித்து விட வேண்டும்.

சொத்து வாங்குவது சம்பந்தமாக பேசி முடிக்கும்போது உயிரோடு இருக்கலாம். அந்த சொத்தை நமது பெயருக்கு பதிவு செய்து மாற்றுவதற்கு இடைப்பட்ட நாளில் இல்லாவிட்டாலும் சிக்கல் தான்.

ஆகவே பதிவு செய்யும் அந்த நாளில் பவர் கொடுத்தவர் உயிரோடு தான் இருக்கிறார் என்பதை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால் சொத்தின் உரிமையாளர் இறந்து விட்ட பின்பு அவரிடம் பவர் அதிகாரம் பெற்றவர் அந்த சொத்தை விற்பனை செய்தால் அது செல்லாது.

இதுபோன்ற விஷயங்களை அலசி ஆராய்ந்து ‘பவர்’ வைத்திருப்பவரிடம் சொத்து வாங்குவது சிக்கலை ஏற்படுத்தாமல் இருக்கும்
Tags:
Privacy and cookie settings