ஆந்திர மாநிலத்தில் 18 வயது வாலிபர் ஒருவர் ரயிலின் மீதேறி செல்ஃபி எடுக்க முயன்ற போது உயரழுத்த மின்சாரத்தால் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
விசாகப்பட்டினத்தில் உள்ள கீதம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வரும் சதீஷ் என்ற மாணவர், நேற்று தனது நண்பர்களுடன் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது ரயிலின் மீது ஏறி செல்ஃபி எடுக்க விரும்பிய சதீஷ், திடீரென ரயில் எஞ்ஜின் மீது ஏறியுள்ளார். அங்கிருந்து தன்னை செல்ஃபி எடுத்துக்கொண்ட அவர் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக பதட்டத்தில் உயரத்தில் இருந்த உயரழுத்த மின்கம்பியைத் தொட்டுள்ளார்.
இதனால் அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், மருத்துவர்கள் அவர் உடல் நிலை பற்றி கூறுகையில், தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், உடலில் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட தீப் புண்களுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.