இந்திய தயாரிப்பான அர்ஜுன் பீரங்கிக்கு சீனா ராணுவ ஆராய்ச்சி மையம் பாராட்டு

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜுன் பீரங்கிக்கு சீனாவின் ராணுவ ஆராய்ச்சி மையம் முதல் முறையாக பாராட்டு தெரிவித்துள்ளது.
 
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அர்ஜுன் பீரங்கியை உருவாக் கியது. மூன்றாம் தலைமுறையை சேர்ந்த பீரங்கியான அர்ஜூன் அதிகப்பட்சமாக மணிக்கு 67 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. 

இந்நிலையில் சீனா - இந்தியா இடையிலான ராணுவ உறவை மேம்படுத்தும் வகையில், ஆண்டுக்கு 6 ஆயிரம் சீன வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும்  கவசப் படைகள் பொறியியல் மையத்தை  பார்வையிட இந்தியப் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது அந்த மையத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் கேணல் லியூ தேகாங்கிடம் அர்ஜுன் பீரங்கி பற்றி கேட்கப்பட்ட போது அவர்  அர்ஜுன் மிகச் சிறந்த பீரங்கி. 

மேலும் இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது என தெரிவித்தார். இந்தியாவின் ஆயுதம் ஒன்றை சீனா புகழ்வது இதுவே முதல் முறை.
Tags:
Privacy and cookie settings