விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என கோரி பிரதமர் மோடிக்கு மகளிர் ஆணைய துணை தலைவி கடிதம் எழுதியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஹரியானாவை சேர்ந்த மகளிர் ஆணைய துணை தலைவி சுமன் தாகியா, ஹரியானாவில் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என கோரியுள்ளார். அதனை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார்.
ஹரியானாவை சேர்ந்த மகளிர் ஆணைய துணை தலைவி சுமன் தாகியா, ஹரியானாவில் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என கோரியுள்ளார். அதனை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார்.
மாநில ஆளுநர் கப்தான் சிங் சோலங்கி, முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோருக்கும் கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மகளிர் ஆணைய தலைவி கம்லேஷ் பன்சால் கூறுகையில் ; துணை தலைவி சுமன் தாகியா கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை. சுமன் தாகியாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், சுமன் தாகியா கூறுகையில் ;
விபச்சாரத்தை கட்டுப்படுத்த முடியாதபோது அதை சட்டப்பூர்வமாக ஆக்கிவிடுங்கள் என்று தான் நான் கூறியுள்ளேன். அதில் எந்த தவறும் இல்லை என்றும் கம்லேஷ் என்னை கேள்வி கேட்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.