நான் தனியாக சந்தோஷமாக இருக்கிறேன் திரிஷா கூறுகிறார் !

திரிஷாவுக்கும் சினிமா தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. நிச்சயதார்த்த விழாவையும் தடபுடலாக நடத்தி முடித்தனர்.
இதையட்டி நடிகர் நடிகைகளுக்கும் நட்சத்திர ஓட்டலில் பிரத்யோகமாக விருந்து அளித்தார்கள்.

இவ்வருடம் இறுதியில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென திருமணம் ரத்தானது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது .பிரிவுக்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை.

ஆனாலும் பிரிவு குறித்து பல்வேறு யூகங்கள் பரவிய வண்ணம் இருந்தன.திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என்று திரிஷாவுக்கு வருண் மணியன் குடும்பத்தினர் தடை போட்டதாகவும் இது பிடிக்காமல் திரிஷா திருமணத்தை ரத்து செய்ததாகவும் கூறப்பட்டது.

நடிகர் தனுஷ் இவர்கள் பிரிவுக்கு காரணம் என இன்னொரு கிசு கிசுவும் பரவியது. தனுசுக்கும் வருண்மணியனுக்கும் ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது. அவரை நிச்சயதார்த்த விருந்துக்கு திரிஷா அழைத்து இருந்தார்.

இதை வருண்மணியன் எதிர்த்ததாகவும் இதனால் திரிஷாவுக்கும் அவருக்கும் காரசார வாக்குவாதம் நடந்ததாகவும் தகவல்கள் பரவின. இருவரும் பிரிய இதுவும் காரணம் என்றனர்.

ஆனாலும் திருமணம் ரத்தானது பற்றி திரிஷா, வருண் மணியன் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கபடவில்லை.

இந்த நிலையில் தற்போது திரிஷா டுவிட்டரில் அவர் ’என்னை பற்றி நிறைய வதந்திகள் உலா வருகின்றன. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். 

நான் தனியாக சந்தோஷமாக இருக்கிறேன். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
Tags:
Privacy and cookie settings