கிராமப்புற மக்களும் முன்னேற திட்டங்கள் வகுக்க வேண்டும்-ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:- மத்திய பா.ஜ.க. அரசு சாதி வாரிக் கணக்கெ டுப்பின் விவரங்களை இன்னும் வெளியிடாமல் கால தாமதப் படுத்துகிறது.
 கிராமப்புற பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் பிரிவினர் உட்பட அனைத்து பிரிவினரையும் சாதிவாரிக் கணக்கெடுப்பில் சரியாக சேர்க்க வேண்டும்.

அதனடிப்படையில் அனைத்துப் பிரிவினரும் அவர்களது பிரிவிற்கேற்ப கல்வியில், வேலை வாய்ப்பில், பிற சலுகைகளில் உரிய வாய்ப்பினைப் பெற்று முன்னேறுவார்கள். கிராம வாசிகள் முதல் நகர வாசிகள் வரை ஒருமித்த சமூக-பொருளாதார வளர்ச்சி ஏற்பட இதுபோன்ற கணக்கெடுப்பு அவசியம்.

கிராமப்புறங்களில் உள்ள சுமார் 18 கோடி குடும்பங்களில், 10 ஆயிரத்துக்கும் மேல் மாத வருமானம் பெறும் குடும்பங்கள் சுமார் 8.30 சதவீதம் மட்டுமே. ஆகவே கிராமப்புற மக்களின் மேம்பாட்டுகான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

நம் நாட்டின் பொருளாத வளர்ச்சியானது கிராமப்புற மற்றும் நகர்புற மக்களின் ஒட்டு மொத்த முன்னேற்றத்தை கொண்டதாக இருக்க வேண்டும்.

நம் நாட்டில் கிராமப்புற மக்கள் நகர்புறத்தில் வாழும் வசதிப்படைத்தவர்கள் போல பொருளாதரத்தில் சரிசமமாக முன்னேறி அனைவரும் நல்ல நிலையில் வாழ்வதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை வகுத்து செயல்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings