கோடிகள் செலவிட்டும் பலன்தான் இல்லை!

கடந்த 2013-2014ம் கல்வி ஆண்டில் 1 முதல் பிளஸ்2 வகுப்புவரை படிக்கும் மாணவ மாணவியருக்கு 6 கோடியே 90 லட்சம் புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.  தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு நியாயமான விலையில் விற்பதற்காக 3 கோடியே 24 லட்சம் புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.
 
இவை தவிர சிறுபான்மை  மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, சமஸ்கிருதம், அரபு மொழிகள் படிக்கும் மாணவர்களுக்காக 1 கோடியே 35 லட்சம் புத்தகம்  அச்சிடப்பட்டுள்ளது.

இதற்காக மேற்கண்ட கல்வியாண்டில் மட்டும் மொத்தம் ரூ.214 கோடியே 72 லட்சத்தை அரசு செலவிட்டுள்ளது. 2014-2015ம் கல்வி  ஆண்டில் 8 கோடியே 72 லட்சம் புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.264 கோடியே 35 லட்சத்தை அரசு செலவிட்டுள்ளது. இவ்வளவு செலவிடும் அரசு  புத்தகங்களை முறையாக மாணவர்கள் கைக்கு கொண்டு சேர்ப்பதில் பல குளறுபடிகளை செய்வது வேதனை.
Tags:
Privacy and cookie settings