இந்தியா முழுவதும் செல்போன் எண்களை மாற்றாமல் பயன்படுத் தும் வசதி (எம்என்பி - Mobile Number Portability) ஜூலை 3 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கை யாளர்கள் பிற மாநிலங்களுக்குச் சென்றாலும்
அல்லது வேறு தொலைத் தொடர்பு வட்டாரங் களுக்கு மாறினாலும் தங்களது செல்போன் எண்ணை மாற்றத் தேவை யில்லை. இதற்காக எவ்வித ரோமிங் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
இதற்கு முன்பு மாநிலங்களு க்கிடையேயும், தொலைத் தொடர்பு வட்டாரங் களுக்கு இடையேயும் இத்தகைய வசதி இருந்தது. இது தற்போது நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் இத்தகைய வசதி கொண்டு வரப்பட்டாலும், செல்போன் உபயோகிப் பாளர்களில் 2 சதவீதம் பேரே இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்வர் என நிபுணர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.