சூப்பர் கார்களில் இலவசமாக பயணம் செய்ய விருப்பமா?

2 minute read
விலை மதிப்பு மிக்க சொகுசு கார்களான ஆடி ஆர்8, ஹம்மர் போன்ற அதிவேக கார்களில் கட்டணமின்றி பயணம் செய்ய (டெல்லி வாசிகளுக்கு மட்டும்) ஒரு அரிய
இணையதளம் வாயிலாக பழைய வாகனங்களை விற்பனை செய்யும் ட்ரூம் நிறுவனம், 
வாடகைக் கார் சேவைகளை வழங்கும் பன்னாட்டு நிறுவனமான உபேருடன் சேர்ந்து இந்த அதிரடி திட்டத்தை செயல் படுத்துகிறது.

இத்திட்டத்தின்படி அதிவேக சொகுசு கார்களில் பயணம் செய்யும் வாய்ப்பை பெற நாளை மதியம் 1 மணியிலிருந்து 

மாலை 4 மணி வரை உபேர் வாடகை காரை முன்பதிவு செய்ய பயன்படும் உபேர் செயலிக்குள் (ஆப்) செல்ல வேண்டும்.

சூப்பர் கார் பயணம் என்ற ஐகான் தோன்றும், அதை தேர்வு செய்ய வேண்டும். 
நீங்கள் பயணம் செய்ய விரும்புவதை உறுதிப்படுத்தினால், ஒரு சொகுசு கார் உங்களை அழைத்துக் கொண்டு 15 நிமிடம் சுற்றிய பிறகு அதே இடத்தில் உங்களை இறக்கி விட்டு விடும்.
போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் அதிஷ்டசாலிகள் மட்டுமே அதிநவீன சொகுசு கார்களில் பயணம் செய்யும் வாய்ப்பை பெறுவார்கள்.

அப்படி பயணம் செய்பவர்கள் பயணம் செய்யும் காருடன் தங்கள் எடுத்த படத்தை பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்த ளங்களில் பகிர்ந்துக் கொள்ளலாம். 
அதில் தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்களுக்கு பல சிறப்பு பரிசுகளும் காத்திருக்கின்றன.
தங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் விதமாக உபேர் மற்றும் ட்ரூம் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது குறிப்பி டத்தக்கது.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings