ஆபாச இணையதளங்கள் முடக்கப்படும் - மத்திய அரசு !

ஆபாச இணையதளப் பக்கங்களை முடக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித் துள்ளது. இந்தூரைச் சேர்ந்த கமலேஷ் வஸ்வானி என்ற வழக்கறிஞர், 
ஆபாச இணையதளப் பக்கங்களை முடக்க உத்தரவிடக் கோரி, மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு விசாரித் துள்ளது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ஆபாச இணையதளப் பக்கங்களை முடக்குவதற்கான சாத்தியமான நடவடிக்கை களை மேற்கொள் ளுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த போதிலும், மத்திய அரசு அதிக அக்கறை கொள்ளவில்லை என்று குறிப்பி ட்டுள்ளார்.

இதையடுத்து, நீதிபதிகள் இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
பின்னர் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிட்டர் ஜெனரல், ஆபாச வலைதளப் பக்கங்களை முடக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று உறுதியளி த்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings