பாடப்புத்தகங்கள்.. எங்கும் தட்டுப்பாடு.. எதிலும் குளறுபடி !

* காலாண்டு தேர்வு நெருங்கியும் விடிவில்லை.

* தவம் கிடக்கும் பெற்றோர்களுக்கு நிம்மதியில்லை.

* ஆளும் கட்சியினர், அதிகாரிகள் இதிலும் ஊழல்.
பள்ளி மாணவர்களுக்கு அத்தியாவசியத் தேவையாக இருப்பது பாடப் புத்தகங்கள்தான். இலவசமாக கிடைத்து வந்த இந்த பாட புத்தகங்களிலும் ஆளும்  கட்சியினர் அரசியல் விளையாடுவதால்,

அந்த விபரீத விளையாட்டில் ஏழை மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் சிக்கி தவிப்பது வழக்கமாகி  விட்டது. இந்த  ஆண்டு காலாண்டு தேர்வு நெருங்கி விட்டது; ஆனால், இன்னும் இலவச பாட புத்தகங்கள் பல மாணவர்களுக்கு கிடைத்தபாடில்லை.

புத்தகங்களை வாங்க பெற்றோர்கள் டிபிஐ வளாகத்தில் தினமும் வரிசைகட்டி தவம் கிடப்பது வாடிக்கையாகி விட்டது.  ஒரு சில வகுப்பு புத்தகங்கள்  மட்டுமே சில்லரை விற்பனையில் கிடைக்கிறது. பல பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு.

 காலாண்டு தேர்வுக்கு பாட புத்தகம் இல்லாமலேயே எப்படி இந்த ஏழை மாணவ, மாணவிகள் சமாளிக்கப்போகின்றனர்? அவர்களின் கல்வி எதிர்காலம்  பிரகாசிக்க முடியாமல் செய்யும் இந்த அதிகாரிகள் என்னதான் செய்கின்றனர்? எந்த கேள்வி கேட்டாலும், பதில் கிடைக்காது;

மற்ற துறைகளை போல  கல்வி துறை நிலையும்  இதுதான். பாட புத்தகம் கிடைக்காமல் ஒரு பக்கம் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் இருக்கின்றனர்; இன்னொரு பக்கம்  பெற்றோர்கள் கிட்டத்தட்ட நிம்மதி இழந்துவிட்டனர்.

இலவச புத்தகங்கள் எவ்வளவு:  

தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் ஆரம்பித்து மேல்நிலைப்பள்ளிகள் வரை   1 கோடியே 30 லட்சம் மாணவ மாணவியர்  படித்து வருகின்றனர். கடந்த 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முப்பருவ முறைப்படி 5கோடியே 34 லட்சம் இலவச பாடப்புத்தகங்கள் அச்சிட்டு  வழங்கப்பட்டன. அதே ஆண்டில் அடுத்த இரண்டு பருவங்களுக்கு தலா 2 கோடியே 40 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டன.

இதையடுத்து 2014-2015ம் கல்வி  ஆண்டில், 1 முதல் 9ம் வகுப்புவரை  முப்பருவ பாடப் புத்தகங்கள் 7 கோடியே 40 லட்சமும், 10ம் வகுப்பு புத்தகங்கள் 67 லட்சத்து 76 ஆயிரமும், பிளஸ்1,  பிளஸ் 2 பாடப்புத்தகங்கள் 2 கோடியே  6 ஆயிரமும் அச்சிட்டு வினியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த பாடப்புத்தகங்கள் அனைத்தும் ஷிலீமீமீt ணீஸீபீ கீமீதீ ஷீயீயீsமீt முறையில் ஒன்று மற்றும் பல நிறங்களில் அச்சிடப்படுகிறது. இதற்கான தாள், தமிழ்நாடு  செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த தாள் மேப்லித்தோ 80 நிஷிவி காகிதம். புத்தகத்தின் மேல் அட்டைகள்   200நிஷிவிஅட்டைகளில் அச்சிடப்படுகிறது. புத்தகம் அச்்சிட ஒவ்வொரு ஆண்டும் டெண்டர் விடப்படுகிறது.

சுமார் 20 முதல் 40 அச்சகங்கள் டெண்டரில்  பங்கேற்கின்றன. பாடநூல் கழக அதிகாரிகள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் அச்சகங்களுக்கு அச்சிடும் பணி ஒதுக்கப்படுகிறது.

என்னதான் மர்மம்: 

சில நேரங்களில் பெங்களூர், ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த அச்சகங்களும் இந்த டெண்டரில் பங்கேற்கின்றன.

அரசு அச்சகங்கள்   இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் தனியாரிடம் அச்சிடும் பணி வழங்கப்படுவதன் பின்னணி என்ன? இதன் மர்மம் புரியவில்லை. கோடிக்கணக்கில் பணம்  புரளும் இந்த துறையில் தனியார் அச்சகங்கள் ஆர்வம் காட்டத்தானே செய்யும்?

ஆனால், 2013ம் ஆண்டு சமச்சீர் கல்வியை எதிர்த்து அச்சிட்ட  பாடப்புத்தகங்களுக்கான அச்சுக் கூலி பல லட்சங்கள், சில அச்சகங்களுக்கு இன்னும் போய்ச் சேரவில்லை.

அந்த பணத்தை திரும்ப கேட்ட அச்சகங்களுக்கு இந்த ஆண்டு புத்தகம் அச்சிடும் பணி வழங்கப்படவில்லை என்பதை பார்க்கும் போது, பணம்   விளையாடும் இந்த விஷயத்தில் ஆளும் கட்சியினர், அதிகாரிகள் சிலரின் தலையீடு இருப்பதும், தாமதத்துக்கு இதுவும் காரணம் என்பதும் ஆசிரியர்  சங்கங்களாலேயே குற்றம்சாட்டப்படுகிறது.

அச்சிடப்பட்டு  பாடப்புத்தகங்களை மாவட்ட மையங்களில் இருந்து எடுத்து செல்ல, ஒரு பருவத்துக்கு ரூ. 500 வரை லாரி வாடகை கொடுக்க  வேண்டியுள்ளது என்று அந்தந்த பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர். 3 பருவத்துக்கும் இதே நிலைதான். பல மாவட்டங்களில் புத்தகங்கள்  கிடைக்கவில்லை என்ற புகார் உள்ளது.

லாரி வாடகை, தூரம், மலைப் பகுதி போன்ற காரணங்களால் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் லாரிகள்  செல்வதில்லை. அதனால் ஒரு மையத்தில் இறக்கி வைக்கப்படும் புத்தகங்கள் சரிவர பள்ளிகளுக்கு சென்று சேர்வதில்லை.

பழைய பேப்பர் கடையில் விற்பனை: 

எத்தனை மாணவர்களுக்கு புத்தகம் கிடைத்தது, எத்தனை பேருக்கு கிடைக்கவில்லை என்பது குறித்து அதிகாரிகள்  பார்ப்பதே இல்லை. அந்தந்த தொகுதியின் எம்எல்ஏக்கள், எம்பிக்களும் கேள்வி எழுப்புவதே இல்லை.

மாணவர் சேர்க்கையின் போது பெற்றோர் ஆசிரியர்  கழகத்தின் மூலம் நன்கொடை வசூலிப்பதில் காட்டும் தீவிரம், அக்கறையை பாடப்புத்தக விஷயத்தில் இவர்கள் காட்டுவதில்லை.

 மாணவர்களுக்கு கொடுக்காமலே பாடப்புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்கப்பட்டதாக சேலம் மாவட்டத்தில் குற்றச்சாட்டு உள்ளது. அது  தொடர்பாக வந்த புகாருக்கு பதில் எழுதிய அதிகாரிகள் இது மிகைப்படுத்தப்பட்டது என்று சொல்லி தப்பிவிட்டனர்.

முன்னதாக கோவை மாவட்டத்தில் ஒரு குடோனில் இருப்பு வைக்கப்பட்ட புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் விற்றதாக ஒரு கல்வி அதிகாரி  சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார்.  கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்டு அதற்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்ட  நிலையில்தான் அதிமுக ஆட்சி அமைந்தது.

சமச்சீர் கல்வி  புத்தகத்தில்  இடம் பெற்ற திமுக ஆட்சி காலத்தை பற்றிய கருத்துகள், படங்கள், பாடல்களை  ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், ஸ்டிக்கர் வாங்கியதில் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

பெயரால் வந்த பிரச்னை: 

சில பாடப்புத்தகங்களில் திமுக தலைவர் பெயர், திமுக ஆட்சியின் சில கருத்துகள் முன்னுரையிலும், பாடங்களிலும் இடம்  பெற்றிருந்ததை கவனிக்காமல் விட்டுவிட்டனர்.

அந்த விஷயங்கள் இடம் பெற்ற பாடப்புத்தகங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு  வழங்கப்பட்டன. மாணவர்களும் படித்து முடித்து தேர்வும் எழுதிவிட்டனர். ஆனால், இந்த ஆண்டும் அதே புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன.

மேற்கண்ட  விஷயங்கள் புத்தகத்தில் இடம் பெற்று இருப்பதை கவனித்த சில ‘ஆளும் கட்சி அபிமான’ அதிகாரிகள் அது குறித்து மேலதிகாரிகளுக்கு போட்டுக்  கொடுத்துவிட்டனர்.

உடனடியாக திமுக தலைவர் பெயர், கருத்துகள் இடம் பெற்ற புத்தகங்கள் அனைத்தையும் மாணவர்களிடம் இருந்து திரும்ப ெபற வேண்டும் என்று பள்ளிக்  கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதன் பேரி்ல் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அ்ந்த புத்தகங்களை திரும்ப பெற்றனர். இந்தாண்டு  பள்ளிகள் திறந்த பிறகு புத்தகங்கள் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.

பல மாவட்டங்களில் பாட புத்தகங்கள் கிடைக்காமல் பல பெற்றோர்களும்  திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். வெளியில் காசு கொடுத்து வாங்கலாம் என்றாலும், கிடைப்பதில் தட்டுப்பாடு காணப்படுகிறது. 

புத்தகங்களைத் தேடி பெற்றோரும் கடை கடையாக ஏறி இறங்கி வருகின்றனர். பொருளாதாரம், புள்ளியியல், வரலாறு, உள்ளிட்ட கலைப்  பிரிவு  பாடப்புத்தகங்களை பாடநூல் கழகம் இன்னும் அச்சிடவில்லை என்பது பெரும் வேதனை. இது ஒருபுறம் இருக்க பாடப்புத்தகங்களில் எழுத்துப் பிழைகள்,  கருத்துப் பிழைகள் என்று ஏராளமான குளறுபடிகள் இடம் பெற்றுள்ளன.

இவற்றை ஒவ்வொரு ஆண்டும் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.  ஆனால், அது குறித்து கல்வி அதிகாரிகளோ, பாடநூல் கழகமோ கண்டுகொள்ளாமல் உள்ளது.

குறைவில்லாத குளறுபடிகள்:


இதுபோன்ற குளறுபடிகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்வதால், ஒரு வல்லுநர் குழு அமைத்து பாடப்புத்தகம் அச்சி டுவதற்கு  முன்பாக சரிபார்க்க வேண்டும். அச்சிட்ட புத்தகங்கள் குறித்த காலத்தில் பள்ளிக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பள்ளி மாணவர்கள்  அனைவருக்கும் புத்தகம் வழங்குவது போல விழாக்கள் எடுப்பதை தவிர்த்து, அனைவருக்கும் புத்தகம் சென்று சேர்ந்ததா என்பதை அதிகாரிகள் உன்னிப்பாக  கண்காணிக்க வேண்டும்.

பாடநூல் கழகம்

பள்ளி மாணவ மாணவியருக்கு தேவையான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக கடந்த 1970ம் ஆண்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தொடங்கப்பட்டது.  1993ல் தமிழ்நாடு பாடநூல் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2013ல் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை கொள்முதல்  செய்து வழங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் என்று அதிமுக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பாடப்புத்தகங்கள் அச்சிடும்போது செலவை
குறைப்பதற்காக புத்தக அட்டை தவிர மற்ற பக்கங்கள் அனைத்துமே கருப்பு வெள்ளை நிறத்தில்தான் கருத்துகள், படங்கள் இடம் பெறும்.

ஆண்டுக்கு ஒரே  புத்தகத்தை மாணவர்கள் படிக்க வேண்டும். கிழிந்து விட்டால் மீண்டும் வேறு புத்தகம் வாங்க வேண்டும். கிடைக்கவில்லை என்றால் அவ்வளவுதான்.

அதிகாரிகளுக்கு நேரமில்லை ஆசிரியர்களுக்கு ஓய்வில்லை
பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு 14 வகையான இலவசப் பொருட்களை ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மேற்கண்ட  பொருட்களை நிறுவனங்களிடம் இருந்து வாங்குவது, அதை பள்ளிகளின் தேவைக்கு ஏற்ப பிரிப்பது, சப்ளை செய்வது என்ற வேலைகளைத்தான் கல்வி  அதிகாரிகள் செய்கின்றனர்.

கல்வி சார்ந்த பணிகள், கற்பித்தல் பணிகள் ்நடப்பதே இல்லை என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கண்ட  பொருட்களை மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் தினசரி ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவே கல்வி அதிகாரிகளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. ஆசிரியர்கள் பிரச்னை, மாணவர்கள் பிரச்னை, கற்றல்  பிரச்னைகளை கவனிக்க அதிகாரிகளுக்கு நேரம் இல்லை என்று புலம்புகின்றனர்.

இலவச பொருட்களை மாணவர்களுக்கு வழங்குவது, தேர்தல் பணி,  மக்கள் தொகை கணக்கெடுப்பு, இவை தொடர்பான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பது என ஆசிரியர்கள் மீது பல வேலைகள் திணிக்கப்படுகிறது.

இதனால்  பாடப்புத்தகங்கள், நோட்டுகளை மாணவர்கள் பெற்றார்களா என்பதை ஆசிரியர்களால் கவனிக்க முடியாத நிலையும் உள்ளது.
Tags:
Privacy and cookie settings