சலீம் திரைப்படம் மூலம் இஸ்லாத்தை ஏற்ற இந்து சகோதரர் !

முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் எண்ணத்தை சலீம் திரைப்படம் மாற்றியது! இஸ்லாத்தை ஏற்ற இளைஞர் ! திருச்சியை சேர்ந்த நண்பர் வீடியோ சிராஜின் மகன் ஜாவித் தஃவாவில் ஆர்வமுள்ள சகோதரர்!
அவர் நேற்று போன் செய்து எனது நண்பருக்கு தஃவா செய்து வருகிறேன் ! நீங்கள் கொஞ்சம் அவரோடு பேசினால் நன்றாக இருக்கும் என்றார் !

சரி இப்தாருக்கு அழைத்து வாருங்கள் என்றேன் ! வரமுடியவில்லை கொஞ்சம் லேட்டாகும் என்றார்!

பரவாயில்லை இரவுத் தொழுகைக்கு முன் அழைத்து வாருங்கள் என்றேன் ! சுமார் 8.30 மணியளவில் வந்தார்கள்!

வந்தவரிடம் ஊர்.பெயர் . தொழில் எல்லாம் விசாரித்து விட்டு அவருக்கு ஏகத்துவம் , தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எனும் ஐந்து கடமைகளில் கட்டமைக்கப் பட்டுள்ள இஸ்லாம் குறித்து விரிவாக எடுத்துரைத்து விட்டு, 

இணை வைப்பைக் குறித்து எச்சரித்து விட்டு இஸ்லாத்தை பின்பற்றினால் இம்மையிலும் மறுமையிலும் ஏற்படும் பலன்கள் குறித்து விளக்கினேன் !

விரிவாக விளக்கி விட்டுஇதுதான் இறைவனால் அருளப்பட்ட சரியான வழி என்பதை ஒப்பக் கொள்கிறீர்களா ? என்று கேட்டதும் ஆம் இதுதான் உண்மை என்றார் !

இதை ஏற்றுக் கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடையலாம் எந்த நஷ்டமும் எனும் போது என்ன தயக்கம் ?

மனிதன் மனிதனாக வாழ இதுதான் வழி எனில் இதுதான் நீங்கள் செல்லவிருக்கும் இலக்குக்கான இறுதி வாகனம்! இதைத் தவற விட்டால் உங்களின் இலக்கை அடைய முடியாது !

இந்த வாகனத்தில் என் தந்தை ஏறவில்லையே நான் எப்படி ஏறுவது ? என் தாத்தா இந்த வாகனத்தை பார்த்ததே இல்லையே ? 

இந்த வாகனத்தில் ஏறி பயணித்தால் என் ஊர் என்ன சொல்லும் ? என்னை சுற்றி உள்ள சொந்த பந்தம் என்ன சொல்லும் ?

என்று பார்த்துக் கொண்டிருந்தால் வண்டி போய் விடுவது போல் வாழக்கை முடிந்து போய் விடும் ! நிச்சயமில்லாத இந்த உலகில் எதற்காக அதைத் தள்ளிப் போட வேண்டும்?

இல்லை ! நான் இப்போதே ஏற்றுக் கொள்கிறேன் என்று கலிமாவை மொழிந்து சுமார் பத்து மணியளவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் ! அல்ஹம்து லில்லாஹ் !

பின்னர் இஸ்லாத்தின் பக்கம் முதல் ஈர்ப்பு எப்படி வந்தது ? என்று கேட்ட போது சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டிர்களே ? என்றார் !

இல்லை சொல்லுங்கள் என்றதும் சலீம் படம் பார்க்கும் வரைக்கும் பத்திரிகைகள், தொலைகாட்சிகள் சொல்வது போல் முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்றுதான் எண்ணி இருந்தேன் !
ஆனால் அந்தப் படத்தைப் பார்த்த பின் என் கருத்தை மாற்றிக் கொண்டது மட்டுமில்லாமல் இஸ்லாத்தை அறிந்து கொள்ளவேண்டும் எனும் ஆவலும் ஏற்பட்டது ! அப்போது தான் நண்பர் ஜாவித் முலம் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டேன்

இன்று தங்களால் இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்வியல் நெறி என்பதை உணர்ந்து ஏற்றுக் கொண்டேன் என்றார் ! அல்ஹம்து லில்லாஹ் !

இது அவனுடைய நேர்வழி அதை தான் நாடியோருக்கு வழங்குகிறான் ! இது இறைவனின் ஒளி ! அதை உங்கள் உள்ளத்தில் ஏற்றி விட்டான் ! இனி அது பிரகாசிக்கும் ! உங்களின் செயல்கள் இனி ஒளிமயமாகும் !

அந்த ஒளி உங்களை சுற்றி உள்ள மற்றவர்களையும் ஈர்க்கும் என்று கூறிய போது அவரது முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது! அல்ஹம்து லில்லாஹ் !

[குறிப்பு: சினிமா நம் மக்கள் மத்தியில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்து அதை தஃவாவுக்கு பயன்படுத்த வேண்டும் எனும் கருத்துக்கு இச்சம்பவம் வலுச்சேர்க்கிறது!]
Tags:
Privacy and cookie settings