ஈரோடு ஜவுளி சந்தை வியாபாரிகளிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளிச்சந்தை வாரந்தோறும் திங்கள் இரவு துவங்கி செவ்வாய்கிழமை இரவு வரையிலும் நீடிக்கும்.
வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள் மொத்த விலையில் ஜவுளிகளை வாங்கி செல்லும் வகையில் பன்னீர்செல்வம் பார்க், திருவேங்கடசாமி வீதி, கனிமார்க்கட் பகுதிகளில் பிளாட்பார சாலையோரங்களில் ஜவுளி வியாபாரிகள் கடை விரிப்பது வழக்கம்.
இவ்வாறு கடை விரிக்கும் வியாபாரிகளிடம் போக்குவரத்து போலீசார் மாமூல் வசூலிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். மாதந்தோறும் 2 முறை என்ற கணக்கில் பகிரங்கமாக நோட்டு போட்டு மாமூல் வசூலிப்பதாக ஜவுளி வியாபாரிகள் புகார் கூறினர்.
யூனிபார்முடன் எந்த பயமும் இல்லாமல் பணம் வசூலிக்கும் காட்சி வியாபாரிகளை மட்டுமின்றி, அவ்வழியே செல்லும் மக்களையும் முகம் சுழிக்க வைத்து வந்தது.
கடைக்கு ரூ.100 வீதம் மாமூல் நிர்ணயித்து கொண்டு, உதவிக்கு ரவுடி போல காட்சியளிப்பவரையும் அழைத்து வருகின்றனர். பணம் தர மறுப்பவர்களை போலீசுடன் வரும் ரவுடிகள் மிரட்டுகின்றனர்.
இதனால் பயந்து போய் மாமூல் தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். ஒரு வாரம் பணம் தராமல் போனால் நோட்டில் குறித்து வைத்து கொண்டு அடுத்த வாரத்தில் கட்டாய வசூல் செய்கின்றனர்.
100க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகளில் வசூல் வேட்டை தீவிரமாக நடக்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜவுளி வியாபாரிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
இன்றும் வழக்கம் போல் நோட்டு போட்டு போக்குவரத்து போலீசார் கறார் வசூலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்ட போலீஸ் நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்குமா?