நிலச்சரிவு.. தாய் இரண்டு குழந்தைகளுடன் மண்ணில் புதைந்த சோகம் !

இமாச்சல பிரதேசத்தில் பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் தாய் தன் இரண்டு குழந்தைகளுடன் மண்ணில் புதைந்தார்.
இங்குள்ள தியோக் பகுதில் உள்ள கில்பி கிராமத்தில் நேபாள ஊழியர் தன் குடும்பத்துடன் தற்காலிக வீட்டில் வசித்து வந்தார். அப்போது அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வீட்டின் மீது மண் சரிந்து விழுந்தது.

இதில் கிருஷ்ணா (25) தன் இரண்டு குழந்தைகள் சந்தீப் (வயது 6), ஆஷூ (3) உடன் மண்ணில் புதைந்தார். ஆனால், அவரது கணவர் ஓம் பிரகாஷ் மற்றும் விஜய் என்ற அவரது மகன் ஆகியோர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்கள்.

இந்த கடும் மழையினால் சிம்லா, மண்டி, குலு, சம்பா, சோலன் மற்றும் சர்மாவுர் மாவட்டத்திலும் கடுமையான அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

குலு மாவட்டத்தில் உள்ள பான்ஜாரில் அதிகபட்சமாக 91 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் 1-ந்தேதி வரை இடி முழகத்துடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tags:
Privacy and cookie settings