ஆதம்பாக்கம் கரிகாலன் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுகுமார் (60). இவர் தனது வீட்டுக்கு முன்புறம் நகைக் கடை வைத்துள்ளார்.
நேற்று நள்ளிரவு 1 மணியளவில் 4 கொள்ளையர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அனைவரும் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தனர். முகத்தில் துணியால் கட்டி மறைத்திருந்தனர். உடலில் எண்ணை பூசியிருந்தனர்.
அவர்களில் 2 பேர் தெரு முனையில் மோட்டார் சைக்கிள்களில் தயாராக நின்று கொண்டிருந்தனர். 2 பேர் மட்டும் வந்து சுகுமாரின் நகை கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமிரா (சி.சி.டி.வி.) இணைப்பை துண்டித்தனர்.
பின்னர் நகைக் கடையின் ‘ஷட்டரை’ கடப்பாரை மற்றும் சுத்தியலால் உடைத்தனர். உடனே கடையில் இருந்த அலாரம் அடித்தது. இதனால் அங்கு பலத்த சத்தம் ஓலித்தது.
இதனால் ஆழ்ந்த தூக்கில் இருந்த சுகுமாரும், அவரது குடும்பத்தினரும் கண்விழித்து அங்கு வந்தனர். கொள்ளையர்களை பார்த்ததும் ‘திருடன்... திருடன்’ என கூச்சலிட்டனர்.
உடனே அவர்கள் இருவரும் கடப்பாரை, சுத்தியல், ஸ்குரு டிரைவர் போன்ற ஆயுதங்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.
அவர்களை சுகுமார் விரட்டிச் சென்றார். அப்போது, எதிரே வந்த டாக்சி கொள்ளையன் மீது மோதியது. இதனால் கீழே விழுந்த அவன் செல்போனை போட்டு விட்டு ஓடிவிட்டான்.
இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சுகுமார் தகவல் கொடுத்தார். உடனே ஆதம்பாக்கம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் கொள்ளையன் விட்டுச் சென்ற செல்போன் ஒப்படைக்கப்பட்டது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்றவர்கள் சுகுமாருக்கு தெரிந்தவர்களா? நோட்டமிட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்றும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.