ரெயில் பயணத்துக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இனி அடையாள அட்டை தேவையில்லை என ரெயில்வே நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
தொலைதூரப் பயணங்களுக்கு ஆன்லைன் மூலமும், முன்பதிவு மையங்கள் மூலமும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இதுவரை டிரைவிங் லைசென்ஸ்,
வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு உள்ளிட்ட அடையாள ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.
இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து எந்த அடையாள ஆவணங்களையும் காட்டாமலேயே டிக்கெட்டுகளை பெறுவதற்கான வசதியை ரெயில்வே நிர்வாகம் நடைமுறைப்படுத்த உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேம்படுத்தப்பட்ட இந்த புதிய விதிமுறைகளின்படி, செப்டம்பர் 1-ம் தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவின்போது எந்த அடையாள ஆவணங்களின் நகல்களையும் காட்டவேண்டிய கட்டாயம் இல்லை.
எனினும், பயணத்தின்போது முன்பதிவு செய்யும் குழுவில் உள்ள யாராவது ஒருவர் உரிய அசல் ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் அபராதத்தை தவிர்க்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.