சவூதி அரேபியாவில் மெக்கா - மதீனா இடையே அதிவேக ரயில்

0 minute read
சவூதி அரேபியாவில் 'ஹரமைன்” என அழைக்கப்படும் அதிவேக ரயில் திட்டத்தின் கீழ் ஜித்தா வழியாக‌ மெக்கா – மதீனா புனித நகர்களுக்கிடையிலான அதிவேக ரயில் சேவையின் பணிகள் ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை அடைந்து விரைவில் அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்க உள்ளது.


இதன் ரயில் பாதையின் தூரம் 453 கிலோ மீட்டர்களாகும். மணிக்கு இந்த ரயில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எனவும் ஆண்டுக்கு 30 லட்சம் மக்கள் இந்த ரயில்வே தடத்தில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதுமிருந்து புனித பயணமாக சவூதி அரேபியா செல்லும் லட்சக்கணக்கான மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:
Today | 24, March 2025
Privacy and cookie settings