பொருளாதார குற்ற வழக்கை காரணம் காட்டி சன் டி.வி.க்கு பாதுகாப்பு அனுமதி வழங்க மறுப்பது கருத்துரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சன் குழும தொலைக்காட்சி மற்றும் பண்பலை வானொலிகளுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, விரைவில் நடைபெறவிருக்கும் மூன்றாம் கட்ட பண்பலை வானொலி ஏலத்தில் பங்கேற்பதற்கான சன் குழுமத்தின் விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
சன் குழுமம் மீது பொருளாதாரக் குற்ற வழக்குகள் இருப்பது தான் அந்த நிறுவனத்திற்கு பாதுகாப்பு அனுமதி மறுக்கப்படுவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
சன் குழுமத்தின் மீது பொருளாதார வழக்குகள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வழக்குகளுக்கு வலுவான ஆதாரங்கள் கூட இருக்கலாம். ஆனால், அவற்றின் மீது நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும். சட்டம் அதன் கடமையை செய்ய அனுமதிக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாகவே பாதுகாப்பு அனுமதி மறுப்பு என்ற பெயரில் சன் குழும ஊடகங்களை முடக்க முயல்வது கருத்துரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.
பொருளாதாரக் குற்றவழக்குகள் இருப்பதாலேயே ஓர் ஊடகத்தை முடக்க முடியும் என்றால், அரசுக்கு பிடிக்காத எந்த ஊடகத்தின் மீதும் வழக்குத் தொடர்ந்து அந்த ஊடகத்தை முடக்கிவிட முடியும். இது ஓர் ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்து விடும்.
இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. எனவே, சன் குழுமத்திற்கு பாதுகாப்பு அனுமதி வழங்கி, வழக்கமான வணிக நடவடிக்கைகளைத் தொடர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.