''தொழிலாளர் தொடர்பான சட்டதிருத்தங்கள், அவர்களுடன் கலந்தாலோசித்து, ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்தான் மேற்கொள்ளப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தொழிலாளர்கள் தொடர்பான விதிமுறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கு தொழிலாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சு நடத்த...:
தொழிலாளர் பிரச்னை கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சங்கங்களுடன் பேச்சு நடத்த, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமை யில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் முதல் கூட்டம், நேற்று முன்தினம்
டில்லியில் நடந்தது.
இந்நிலையில் டில்லி யில் நேற்று, 46வதுஇந்திய தொழிலாளர் மாநாடு நடந்தது. மாநாட்டை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
தொழிலாளர்கள் தொடர்பான சட்ட திருத்தங்கள், அவர்களுடன் கலந்தாலோசித்து, ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின் அமல்படுத்தப்படும். தொழில் - தொழிலதிபர் கள், அரசு - நாடு, வேலை - தொழிலாளர் சங்கம் ஆகிய வற்றின் இடையே, சிறிய இடைவெளியே உள்ளது.
பெரும்பாலும், தொழிலை பாதுகாப்பதாகக் கூறுபவர், கடைசியில், தொழிலதிபர்களை காக்கும் பணியை செய்கிறார். எனவே, தொழில் துறை யில் உள்ள பிரச்னைகளை புரிந்து கொண்டு, பாரபட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டில், தொழில் பழகுனர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. தொழில் பழகுனர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை, தொழில் துறை உருவாக்கித் தர வேண்டும்.
மூன்று லட்சமாக உள்ள தொழில் பழகுனர் எண்ணிக்கையை, 20 லட்சமாக அதிகரிக்க வேண்டும். தொழில் பழகுனர் எண்ணிக்கை, சீனாவில் இரண்டு கோடியாகவும், ஜப்பானில் ஒரு கோடியாகவும், ஜெர்மனியில், 30 லட்சமாகவும் உள்ளது.
நாட்டில் முன்னேற்றம் ஏற்பட, இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். தொழிலாளர் திறனை நவீனப்படுத்துவதில் யாரும் அக்கறை செலுத்துவதில்லை. இச்சூழ்நிலை மாற வேண்டும்.
நடவடிக்கைதொழிலாளர்களுக்கு மரியாதை கூடும் வகையில் சூழலை ஏற்படுத்த, அரசு, தொழில் துறை, வர்த்தக சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர் நலனுக்காக, அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கி உள்ளது. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையாக, 1,000 ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க முன்னுரிமை தரப்படும்.
அரசு இணையதளத்தில் வேலை:
அரசு நடத்தும் வேலைவாய்ப்பகங்களில் பெரியளவில் மாற்றம் ஏற்படுத்தும், தேசிய தொழில் சேவை திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், 'தேசிய தொழில் சேவை இணையதளம்' மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்தால், 100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. வேலை தேடுவோருக்கும், வேலை அளிப்போருக்கும், ஒரே தீர்வாக, இந்த இணையதளம் செயல்படும்.
நாடு முழுவதும் உள்ள, 982 அரசு வேலைவாய்ப்பகங்களில் வேலை பெற, 4.4 கோடி பேர் ஏற்கனவே பதிவு செய்து உள்ளனர். முதற்கட்டமாக, இவர்களில், இரண்டு கோடி பேரின் தகவல்களை, அரசு இணையதளத்தில் இடம்பெறச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஒன்பது லட்சம் தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஊழியர்களை, அரசு இணையதளம் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம்.அரசின் வேலைவாய்ப்பக இணையதளத்தில் பதிவு செய்வதில் பிரச்னைகள், சந்தேகங்கள் இருந்தால், தெளிவு பெற, கட்டணமில்லா
அழைப்பு எண் 1800-425-1514 தரப்பட்டுள்ளது.
செவ்வாய் முதல், ஞாயிறு வரை, காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்